‘அடங்க மறு’ திரைப்படத்தை ‘கிளாப் போர்ட் புரொடக்‌ஷன்ஸ்’ வி.சத்யமூர்த்தி வெளியிடுகிறார்..!

‘அடங்க மறு’ திரைப்படத்தை ‘கிளாப் போர்ட் புரொடக்‌ஷன்ஸ்’ வி.சத்யமூர்த்தி வெளியிடுகிறார்..!

ஜெயம் ரவி – ராஷி கண்ணா இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ள ‘அடங்க மறு’ திரைப்படம், பெரிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பில் பெரிய பட்ஜெட் படமாக உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் சம்பத்ராஜ், முனீஷ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, அழகம் பெருமாள், மீரா வாசுதேவன் மற்றும் பல பிரபல நடிகர், நடிகையர்ககள் நடித்திருக்கிறார்கள்.

எழுத்து, இயக்கம் – கார்த்திக் தங்கவேல், தயாரிப்பு நிறுவனம் – ஹோம் மூவி மேக்கர்ஸ், தயாரிப்பாளர் – திருமதி. சுஜாதா விஜயகுமார், இணை தயாரிப்பு – ஆனந்த் சாய், இசை – சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு – சத்யன் சூரியன், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – லால்குடி என்.இளையராஜா, வசனம் – விஜி, சண்டை இயக்கம் – ஸ்டன் சிவா, நடன இயக்கம் – தினேஷ், ஆடை வடிவமைப்பு – ஜே.கவிதா.

இந்தப் படத்தின் ஆல்பம் மற்றும் ப்ரோமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.  

இந்நிலையில், பிரபல விநியோகஸ்தரான கிளாப் போர்ட் புரொடக்சன்ஸ் V.சத்தியமூர்த்தி இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமைகளை பெற்றிருக்கிறார்.   

சீட்டின் நுனிக்கே வர வைக்கும், துரத்தல் வகை த்ரில்லர் படங்கள்  புத்திசாலித்தனமான மற்றும் சுறுசுறுப்பான விஷயங்களால் ரசிகர்களை கவர தவறுவதே இல்லை.

இயக்குநர் கார்த்திக் தங்கவேலின் இந்த ‘அடங்க மறு’ படமும் அந்த வகையிலான ஒரு படம்தான். அதிரடியான சண்டை காட்சிகள், யதார்த்தமான அரங்க அமைப்பு மற்றும் மிகச் சிறந்த நடிகர்கள் மூலம் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இதன் மூலம் இப்போது சினிமா வட்டாரத்தில் வர்த்தகர்களின் ஃபேவரைட் படமாக மாறியிருக்கிறது.