நிர்பயா வழக்கு குற்றவாளியை கொலை செய்ய விரும்பும் நடிகை டாப்ஸி..!

நிர்பயா வழக்கு குற்றவாளியை கொலை செய்ய விரும்பும் நடிகை டாப்ஸி..!

கடந்த 2012-ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்து ஒன்றில்  சில கொடியவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், அந்த பேருந்தின் டிரைவராக பணிபுரிந்த முகேஷ் சிங் சமீபத்தில் India’s Daughter என்ற ஆவணப் படத்திற்கு அளித்திருக்கும் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

mukesh singh

பெண்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமாக அந்த பேட்டியில் முகேஷ் சிங் கூறியதற்கு நாடு முழுவதிலும் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் முன்னணி நடிகைகள் சிலரும் ஆத்திரத்துடன் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

Taapsee-pannu-2

பிரபல நடிகை டாப்சி, முகேஷ் சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து கூறுகையில், “முகேஷ் சிங்கின் பேட்டின் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கடவுள் என்னை ஒரே ஒரு கொலை செய்ய அனுமதித்தால் கண்டிப்பாக நான் முகேஷ் சிங்கை கொலை செய்து எனது ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வேன். குற்றம் செய்தவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து திருந்துவதற்காகத்தான் ஜெயில் தண்டனை கொடுக்கப்படுகிறது. ஆனால் முகேஷ் சிங் போன்றவர்களை ஜெயில் வாழ்க்கை திருத்தாது. இவரை இன்னும் எதற்காக உயிரோடு வைத்துள்ளனர் என்பதே தெரியவில்லை. இந்த டாக்குமெண்ட்டரியை தடை செய்வதால் மட்டும் அவனுக்கு நல்ல புத்தி வரப் போவதில்லை…” என்று கூறியுள்ளார்.

இதே டாக்குமெண்ட்டரியில் குற்றவாளியின் வக்கீலும் கற்பழிப்புக்கு ஆதரவாக பேசியிருப்பதை நடிகை அமலா பால் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

Amala-Paul-Stills-23

அமலாபால் இது பற்றிச் சொல்கையில், “பெண்களுக்கு இன்னும் சக்தியை கொடு கடவுளே.. முக்கியமாக இது போன்ற வக்கீல்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள சக்தி வேண்டும்.. மேலும் குற்றவாளிக்கு இவன் ஒன்றும் சலைத்தவனில்லை..” என வக்கீல் மீது சீறிப் பாய்ந்துள்ளார். 

அட.. நம்ம நடிகர்களைவிடவும் நடிகைகள் ரொம்ப போல்டா பேசுறாங்களே.!? நல்ல விஷயம்தான்..!




error: Content is protected !!