லக்சம்பர்க் நாட்டின் தூதராக நடிகை சுஹாசினி நியமனம்..!

லக்சம்பர்க் நாட்டின் தூதராக நடிகை சுஹாசினி நியமனம்..!

பிரபல நடிகையும், சமுக ஆர்வலருமான திருமதி சுஹாசினி மணிரத்னம் ‘கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்’ நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் கவுரவ தூதராக நேற்று நியமிக்கப்பட்டார்.

சுஹாசினி கவுரவத் தூதராகப் பதவியேற்பு நிகழ்ச்சி நெற்று மாலை சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டலில் நடைபெற்றது.

IMG_7952

இந்தியாவுக்கான ‘கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்’ நாட்டின் தூதுவர் திரு. சாம் ஸ்ரீநர் முறைப்படி சுஹாசினி மணிரத்னத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் வெளிநாட்டு தூதர்கள் மற்றும் கார்ப்பரேட் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவை குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்த சாம் ஸ்ரீநர் பேசுகையில், “திருமதி சுஹாசினி மணிரத்னம் அவர்களை எங்கள் நாட்டின் அதிகாரப்பூர்வ கவுரவ தூதராக நியமித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சுஹாசினி மணிரத்னம் அவர்கள் 350 படங்களுக்கும் மேல் நடித்த ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல, அவர் பெண்கள் நலனிலும் ஆர்வம் கொண்ட பன்முக சிந்தனையாளர்.. அவரை அதிகாரப்பூர்வமான தூதராக நியமித்ததால் இந்தியா மற்றும் கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டினுடனான உறவு மேலும் மேம்படும்..” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

IMG_0663

பதவியேற்ற பின் பேசிய திருமதி சுஹாசினி மணிரத்னம், தன்னை தூதராக நியமித்ததற்கு நன்றி கூறினார். தான் பிறந்த பரமக்குடி என்ற சிறிய ஊருடன் கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்கை ஒப்பிட்ட பேசிய சுஹாசினி மணிரத்னம், தனக்கு அளித்த பொறுப்பை செவ்வனே செய்வேன் என்று உறுதியளித்தார்.

ஒரு நடிகர் மற்றொரு நாட்டின் அதிகாரப்பூர்வ தூதராவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 




error: Content is protected !!