full screen background image

“சினிமாவுக்கு விமர்சனம் எழுத மத்தவங்களுக்கு உரிமை இல்லை..” – நடிகை சுஹாசினியின் கோபம்..!

“சினிமாவுக்கு விமர்சனம் எழுத மத்தவங்களுக்கு உரிமை இல்லை..” – நடிகை சுஹாசினியின் கோபம்..!

நேற்றைக்கு நடைபெற்ற ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தின் பாடல் வெற்றி விழாவில் நன்றியுரை நிகழ்த்திய நடிகை சுஹாசினி மணிரத்னம் வேறொரு பிரச்சினையைக் கிளப்பிவிட்டார்.

தனது நன்றியுரை பேச்சில், “மெட்ராஸ் டாக்கீஸில் இருந்து ஒரே ஒரு வேண்டுகோள்தான். எங்களைவிட நீங்க பலம் வாய்ந்த பேனாவை உங்க கையில வைச்சுட்டு இருக்கீங்க. எப்படி தகுதியுள்ளவர்கள்தான் படத்தில் நடிக்க முடியுமோ, ஒளிப்பதிவு பண்ண முடியுமோ, ரஹ்மான் மாதிரி மியூசிக் தெரிஞ்சவங்கதான் மியூசிக் பண்ண முடியுமோ அதேமாதிரி எழுதத் தெரிஞ்சவங்கதான் விமரிசனம் எழுதணும். இந்தப் படத்தைப் பத்தி எல்லாம் எழுதணும். நீங்க எல்லாம் இருக்கும்போது எல்லோரையும் எழுத விட்டுடாதீங்க. முதல்ல நீங்க வந்து இந்தப் படத்தைப் பார்த்துட்டு, இந்தப் படத்தைப் பத்தின விஷயங்களை எழுதுங்க.

இப்போ கம்ப்யூட்டர் உலகத்துல, மவுஸ் மூவ் பண்ணத் தெரிஞ்சவங்க எல்லாம் எழுத்தாளராயிட்டாங்க. அப்படி விடவேண்டாம். நீங்க எல்லாம் இவ்வளவு தகுதியுள்ளவர்களாக இருக்கும்போது எதுக்கு மத்தவங்களை எழுத விடறீங்க. உங்களை நம்பிதான் நாங்க இருக்கோம். அதனால், இந்தப் படத்தைப் பத்தி நல்லா எழுதணும்ணு வேண்டிக்கறேன்” என்றார் சுஹாசினி.

ம்.. கேட்க நல்லாத்தான் இருக்கு. கருத்துச் சுதந்திரத்தை இப்படியெல்லாம் தடை செய்வது அரசாங்கத்தால்கூட முடியாது. எழுத்துரிமைக்கு தடை போட அரசுக்கு உரிமையே கிடையாதுன்னு இப்போத்தான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லுச்சு. மேடம் மறந்திட்டாங்க போலிருக்கு..! 

Our Score