‘இவன் தந்திரன்’ படத்தில் கவுதம் கார்த்திக்குடன் ஜோடி சேர்கிறார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்..!

‘இவன் தந்திரன்’ படத்தில் கவுதம் கார்த்திக்குடன் ஜோடி சேர்கிறார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்..!

இயக்குநர் ​R.கண்ணன் இயக்கவுள்ள ‘இவன் தந்திரன்’ என்கிற புதிய படத்தில் கவுதம் கார்த்திக்கின் ஜோடியாக, நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

img_1445

இவர் கன்னடத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற ‘யு – டர்ன்’ படத்தின் நாயகி ஆவார்.

இது பற்றி இயக்குநர் கண்ணன் கூறும்போது, “படத்திற்கு கதாநாயகன் முடிவான பிறகு, கதாநாயகி கதாபாத்திரத்துக்கு பல கட்ட தேர்வுகள் நடத்தினோம். கடைசியாக ஒரு நடிகையாக அல்லாமல், அந்த கதாபாத்திரமாகவே பிரதிபலித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், படத்தில் R.J.பாலாஜியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

img_1781  

இது காதல் கலந்த ஆக்சன் காமெடி படமாக இருக்கும். கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்ட கதாபாத்திரங்கள்போல், இந்தப் படத்தில் மழையும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வெளிப்படும்.

img_1683

அதனால்தான் 8 மாதங்கள் காத்திருந்து அக்டோபர், நவம்பரில் படப்பிடிப்பை தொடர்ச்சியாக நடத்த உள்ளோம். படப்பிடிப்பு வரும் அக்டோபர் 12-ம் தேதி தொடங்கி  சென்னையில் துவங்கி ஒரு மாதம் முழுவதும் நடைபெற உள்ளது..” என்றார்.




error: Content is protected !!