டூயட்டுன்னாலும் இத்தனை கஷ்டப்படணுமா..? நடிகை சங்கீதாவுக்கு நேர்ந்த கொடுமை..!

டூயட்டுன்னாலும் இத்தனை கஷ்டப்படணுமா..? நடிகை சங்கீதாவுக்கு நேர்ந்த கொடுமை..!

1998-ம் ஆண்டு ‘பூஞ்சோலை’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை சங்கீதா ‘கபடி கபடி’, ‘பிதாமகன்’, ‘உயிர்’, ‘எவனோ ஒருவன்’, ‘நேபாளி’, ‘நான் அவனில்லை’, ‘மன்மதன் அம்பு’, ‘தனம்’ ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

2009-ல் பின்னணி பாடகர் அரவிந்த் கிருஷை காதலித்து கல்யாணம் செய்த கையோடு திரையுலகத்திற்கு கொஞ்சம் முழுக்கு போட்டுவிட்டு டிவி சீரியல்களிலும், தொடர்களிலும் தலைகாட்டி வருகிறார். 

இவர் எப்போதோ நடித்த ஏதோவொரு படத்தின் டூயட் பாடல் காட்சியின் மேக்கிங்கை இப்போது இணையத்தில் எடுத்துவிட்டிருக்கிறார்கள். 

இத்தனை பேர் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இத்தனை தடவை உருண்டு, புரண்டு நடிக்கும்போது என்ன காதல் உணர்வு வரும்..?

ரொம்ப ஜாலியா படத்துல நடிக்குறாங்கன்னு சொல்றவங்க கொஞ்சம் இந்த வீடியோவை பார்த்துட்டு அப்புறமா பேசுங்க..!