“டிரெயிலரை பார்த்து படத்தை எடை போடாதீர்கள்” – நடிகை சதா வேண்டுகோள். 

“டிரெயிலரை பார்த்து படத்தை எடை போடாதீர்கள்” – நடிகை சதா வேண்டுகோள். 

விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கிய இயக்குநர்  அப்துல்  மஜீத்  இயக்கியுள்ள அடுத்தத் திரைப்படம்  ‘டார்ச் லைட்’ .

இந்தப் படத்தில் நடிகைகள் சதா, ரித்விகா இருவரும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். புதுமுகம் வருண் உதய், தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா. இயக்குநர் ரங்கநாதன், சரவண சக்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சக்திவேல், இசை – ஜேவி, பாடல்கள்- வைரமுத்து, படத் தொகுப்பு -மாரீஸ், கலை – சேகர், நடனம் – சிவராகவ், ஷெரீப், தயாரிப்பு – அப்துல் மஜீத், எம்.அந்தோனி எட்வர்ட், ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர்.

இத்திரைப்படம் இரவு நேரங்களில் நெடுஞ்சாலை ஓரங்களில் பாலியல் தொழில் செய்யும் பெண் தொழிலாளிகளை பற்றிய கதை என்பதால் படத்தின் வெளியீ்ட்டுக்கு முன்பே படத்திற்கு அதிக வரவேற்பு காத்திருக்கிறது.

DSC_2794 (FILEminimizer)

இத்திரைப்படம் நாளை செப்டம்பர் 7-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதையொட்டி இந்த ‘டார்ச் லைட்’ படத்தின் பத்திரிகையாளர்  சந்திப்பு, நேற்று மாலை லீ மேஜிக் லேட்டர்ன் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் நாயகி சதா பேசும்போது, “நான் சற்றே சிறிய இடைவெளிக்குப்  பின்பு தமிழில் நடித்திருக்கிறேன். இடையில் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்தேன். நல்லதொரு கேரக்டருக்காக தேர்ந்தெடுத்து நடிக்க விரும்பியதால் இந்தத் தாமதம் நேர்ந்தது.

DSC_2780 (FILEminimizer)

இந்த ‘டார்ச் லைட் ‘படத்தின் கதையை இயக்குநர் மஜீத் என்னிடம் ஒரு முறை சொன்னார். கதை பிடித்தது. ஆனால் என்னால் உடனே முடிவெடுக்க முடியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் கேட்டேன். அப்போதும் அவர் அதே தெளிவோடு கூறினார். என்னால் எதுவும் சட்டெனக் கூற முடியவில்லை. சரியாக வருமா.. நம்மால் முடியுமா என்கிற எண்ணம் இருந்தது. மஜீத் என் மேல் நம்பிக்கை வைத்தார். உங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார். நடிப்பது என்று முடிவெடுத்து விட்டேன்.

இது பாலியல் தொழிலில் சிக்கிய பெண்கள் பற்றிய கதைதான். அவர்கள் அந்தத் தொழிலுக்கு விரும்பி வருவதில்லை. ஆடம்பர வாழ்க்கைக்கோ, பெரிய பணத்துக்கோ ,சந்தோஷத்துக்கோ  என்று வருவதில்லை. குடும்ப வறுமை சூழலில்  வருகிறார்கள். இந்தத் தொழிலில் ஆண்கள் சம்பந்தப்பட்டாலும் கெட்ட பெயரெல்லாம் பெண்களுக்குத்தான். அவர்களின் வலி, வேதனை, துன்பம், துயரம், மன அழுத்தம்  யாருக்கும் தெரிவதில்லை. அதைத்தான் இதில் பதிவு செய்திருக்கிறார்  இயக்குநர்.

படப்பிடிப்பின் பெரும் பகுதி அவுட்டோரில் நடைபெற்றது. அதுவும் லைவ் லொக்கேஷன்களில்  நடைபெற்றது. அங்கிருந்த யாருக்கும் நாங்கள் சினிமா எடுப்பது தெரியாது. அப்படிப்பட்ட இடங்களில் கேமரா பொசிஷன் பார்த்து நானும் கூட்டத்தில் கலந்து நடிக்க வேண்டும். இது ஒரு சவால்தான்… இருந்தும் நடித்தேன். மொத்தத்தில் பல வகையிலும் எனக்கு இது மறக்க முடியாத படம்.

இது மாதிரி பாலியல் தொழிலாளியாக நடிக்கப் பலரும் தயங்கவே செய்வார்கள். காரணம், படத்தின் பாத்திரத்தை பாத்திரமாகப் பார்க்கும் பக்குவம்  பலருக்கும்  இருப்பதில்லை. அதுதான் பிரச்சினை. என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாருமே முதலில் இதைத்தான் கேட்கிறார்கள்.

என்னைப் படத்தில் சதாவாகப் பார்க்காதீர்கள். பாத்திரமாகப் பாருங்கள் என்பதே என் பதில். டிரெய்லரை பார்த்து விட்டு கேள்வி கேட்கிறார்கள். டிரெயிலர், போஸ்டர்களை பார்த்து விட்டு படம் பற்றி முடிவு செய்யக் கூடாது.

அட்டைப் படத்தைப் பார்த்துவிட்டு ஒரு புத்தகத்தை முடிவு செய்ய முடியாது அல்லவா?. டிரெய்லரில் சில வினாடிகள் உள்ள வசனங்கள் பற்றிக் கேட்கிறார்கள். சர்ச்சையாக இருக்கிறதே என்கிறார்கள். படம் பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள்…” என்றார் சதா. 

DSC_2759 (FILEminimizer)

இயக்குநர் அப்துல் மஜீத் பேசும்போது “இது பாலியல் தொழிலாளி பற்றிய கதைதான். ஆனால் செக்ஸ் படமல்ல. இந்தக் கதையை பல நடிகைகளிடம் கூறினேன். ஆனால் யாரும் நடிக்க வரவில்லை. சதா மட்டுமே முன் வந்தார். அவர் கதையை மீண்டும் மீண்டும் கேட்டு தெளிவு பெற்றார், அதன் பிறகு தயக்கத்தை விட்டுவிட்டு நடிக்கத் தயாராகி விட்டார்.  அந்தக் கதாபாத்திரத்துக்குள் நுழைந்து விட்டார். பிரமாதமாக நடித்துள்ளார்.

படம் எடுத்த பின் சென்சாரில் நாங்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ரிவைஸிங்  கமிட்டி போய்த்தான் சர்டிபிகேட் பெற வேண்டியிருந்தது.  ஏராளமான வெட்டுகள்  கொடுத்தார்கள்.

சினிமாவில் சென்சார் பெரிய பிரச்சினையாக உள்ளது. அவர்களுக்குச் சினிமா மொழி புரிவதில்லை. சென்சாரில் தணிக்கைக் குழுவில் சினிமாத் துறையினர் நான்கைந்து பேராவது இருக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்…” என்றார். 

நிகழ்ச்சியில் நாயகன் வருண் உதய், ஒளிப்பதிவாளர்  சக்திவேல், இசையமைப்பாளர் ஜேவி, படத்தில் நடித்துள்ள இயக்குநர் சி.ரங்கநாதன் ஆகியோரும் பேசினார்கள்,

 




error: Content is protected !!