தேசிய விருது – ரித்திகா சிங்கிற்கு கிடைத்த இனிய அதிர்ச்சி..!

தேசிய விருது – ரித்திகா சிங்கிற்கு கிடைத்த இனிய அதிர்ச்சி..!

நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் சிறந்த நடிகைக்கான நடுவர்களின் சிறப்பு விருதினைப் பெற்ற ‘இறுதிச் சுற்று’ நாயகி ரித்திகா சிங் மட்டுமே இந்த விருதினை சற்றும் எதிர்பார்க்காதவர்.

ஏனெனில் தேசிய திரைப்பட விருதுகளின் நடிப்புப் பிரிவில் பரிசினைப் பெற வேண்டுமெனில் அந்த நடிகர் அல்லது நடிகை அவர்களது சொந்தக் குரலில் பேசியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்வு பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் அதையும் மீறி இந்தப் படத்தில் சிறப்பு விருதாக ரித்திகா சிங்கை கெளரவிக்க நினைத்த தேர்வுக் குழு நடுவர்களின் செயலுக்கு நமது வணக்கங்கள்.

ரசிகர்களுக்கே இனிய அதிர்ச்சியாக இருக்க ரித்திகா சிங்கோ திகைத்துப் போய்விட்டார். இது குறித்து தனது டிவிட்டரில் அவர் எழுதியிருப்பது இது :

“கடவுளே..! என் வாழ்க்கையில் நான் இந்தளவுக்கு அழுததில்லை. என் வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணம் இது. தேசிய விருது..? இதற்கு நான் தகுதியுடையவள் என்று நான் எண்ணியதே இல்லை. அந்தப் படத்துக்காக நான் சொந்தக் குரலில் பேசவே இல்லை. எனக்காக உமா மகேஸ்வரி டப்பிங் பேசினார். இந்த விருதுக்காக நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.

‘இறுதிச் சுற்று’ படத்தில் மதி கதாபாத்திரத்தில் நடிக்கக் காரணமாக இருந்த இயக்குநர் சுதா உள்பட அனைவருக்கும் நன்றி. இந்த மண்ணில் நான்தான் மிகவும் அதிர்ஷ்டமானவள். எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி..” என்று கூறியுள்ளார்.

அதிர்ஷ்டமும், திறமையும் சேர்ந்திருந்தால் வெற்றி கிடைக்கும் என்பார்கள். ரித்திகாவுக்கு அது சாத்தியமாகியிருக்கிறது. வாழ்த்துகள். பாராட்டுக்கள்..!




error: Content is protected !!