“எனக்கும் இயக்குநர் சுந்தர் சி-க்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை..” – நடிகை ராய் லஷ்மி விளக்கம்..!

“எனக்கும் இயக்குநர் சுந்தர் சி-க்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை..” – நடிகை ராய் லஷ்மி விளக்கம்..!

இரண்டு, மூன்று நாட்களாகவே பெல்காம் அழகி, ராய் லஷ்மியை குறி வைத்து இணையத்தளங்களில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருந்தது..

“அரண்மனை’ படத்தில் யாருக்கு முக்கியத்துவம் என்பதில் ராய் லஷ்மிக்கும், ஹன்ஸிகாவுக்கும் இடையில் லடாய்…” என்பது மெயின் கிசுகிசு.

இதன் கூடவே இன்னொரு சைடு கிசுகிசுவாக, “ராய் லஷ்மி நடித்த காட்சிகள் பலதையும் படத்தின் நீளம் கருதி இயக்குநர் சுந்தர் சி நீக்கிவிட்டாரென்றும். இதனால் ராய் லஷ்மிக்கும், சுந்தர் சி-க்கும் இடையில் வாய்க்கா வரப்பு தகராறு ஏற்பட்டிருப்பதாகவும்” செய்திகள் வெளியாகியிருந்தன.

இதையெல்லாம் கேள்விப்பட்ட ராய் லஷ்மி கொதித்துப் போயிருக்கிறார். “இது எல்லாமே அடிப்படை ஆதாரமே இல்லாத புரளிகள்…” என்று இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பு ஒன்றில் கூறியுள்ளார்.

“அரண்மனை’ படத்தை தான் பார்த்ததாகவும், அதில் தான் நடித்த காட்சிகள் அனைத்துமே இருப்பதாகவும், எந்தக் காட்சியும் வெட்டப்படவில்லை…” என்றும் தெரிவிக்கிறார் ராய் லஷ்மி. “இதனால் தனக்கும் இயக்குநருக்கும் இடையில் எந்தவித மோதலும் இல்லை.. கத்திரிக்காயும் இல்லை” என்கிறார் ராய் லஷ்மி.

இந்தப் படம் மட்டுமில்லாமல் ‘இரும்பு குதிரை’ படம் வெளியாகும் நாளைகூட தான் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில்  தெரிவித்துள்ளார் ராய் லஷ்மி.

வர வர அரசியல்வாதிகள் ரேஞ்ச்சுக்கு சினிமாக்காரங்களும் டெய்லி ஒரு அறிக்கை விட ஆரம்பிச்சி்ட்டாங்க. அறிக்கை விடுற அளவுக்கு மீடியாக்களும் சினிமா பிரபலங்களை தள்ளிக்கிட்டே போறாங்க..

இது எங்க போய் முடியப் போகுதோ..?