‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் ஒப்பனை இல்லாமல் நடித்திருக்கும் பார்வதி நாயர்..!  

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் ஒப்பனை இல்லாமல் நடித்திருக்கும் பார்வதி நாயர்..!  

'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான, நடிகை  பார்வதி நாயர், ஜனவரி 14-ம் தேதி வெளியாகவுள்ள 'கோடிட்ட இடங்களை நிரப்புக' திரைப்படம் மூலம் தமிழக ரசிகர்களின் நெஞ்சங்களை மீண்டும் கிறங்கடிக்க வருகிறார்.

புதுமை இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கியிருக்கும் இந்த 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தில் சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

paarvathy-nair-2

இந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றிப் பேசிய நடிகை பார்வதி நாயர், "இந்தப் படத்தில் 'மோகினி' என்ற மலையாள பெண்  கதாபாத்திரத்தில்  நடித்திருக்கிறேன். இதில் ஒரு விசேஷம் என்னவெனில் எந்தவித ஒப்பனையும் இன்றி  இதில் நடித்திருக்கிறேன் என்பதுதான்.

எனக்கு மிகுந்த நம்பிக்கை அளித்து, என்னுள் இருக்கும் நடிப்பு திறமையை மிக அழகாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் பார்த்திபன் சார். ஒத்திகை என்று எதுவும் இல்லாமல் வெறும் ஒரு மாத காலத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்து இருக்கின்றோம்.

இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே, இந்த மோகினி கதாபாத்திரம்தான் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. என்னுடன் இணைந்து பணியாற்றிய சாந்தனு, பல்வேறு தருணங்களில் எனக்கு பக்கபலமாய்  இருந்தார்.

தற்போது எங்களின் இந்த 'கோடிட்ட இடங்களை நிரப்புக' திரைப்படம் ஏற்படுத்தியிருக்கும் அமோக  எதிர்பார்ப்பை பார்க்கும்பொழுது, நிச்சயமாக எங்கள் இருவரின் நடிப்பு பொருத்தமும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்று பெரிதும் நம்புகிறேன்.

தமிழ்நாட்டில் தங்கி இருந்து, தமிழ் படத்தில் நடித்திருப்பது என்னை ஒரு தமிழ் பெண்ணாகவே மாற்றியிருக்கிறது. வரும் ஜனவரி 14-ம் தேதி அன்று, கோடிட்ட இடங்களுக்கு ரசிகர்கள் எழுத இருக்கும் பதிலுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்…" என்று புன்சிரிப்போடு கூறுகிறார் பார்வதி நாயர்.