தமிழில் ஒரு ரவுண்டு வர காத்திருக்கும் நிகிஷா படேல்..!

தமிழில் ஒரு ரவுண்டு வர காத்திருக்கும் நிகிஷா படேல்..!

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பிரிட்டிஷ் இந்திய கூட்டணியில் பிறந்த நிகிஷா படேல்,  இப்போது இந்திய சினிமாவில் தன் அழகாலும்,  திறமையாலும் அசத்திக் கொண்டிருக்கிறார்.

பல பி.பி.சி. ஷோக்களில் தன் திறமையால் அசத்திய நிகிஷா படேல்,  ‘புலி’ என்கிற தெலுங்கு படத்தின் மூலமாக இந்திய சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து கன்னடத்திலும் நடித்தார்.

‘தலைவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இந்த இங்கிலாந்து அழகி, அடுத்தடுத்து வந்த படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்தார்.

‘என்னமோ ஏதோ’ படத்தில் இளமை கொஞ்சும் அழகியாக, ‘கரையோரம்’ படத்தில் பழி வாங்கும் கோபக்காரியாக நடித்தாலும் கவர்ந்திழுக்கும் ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

நகுல் உடன் ‘நாரதன்’ படத்தில் ஹோம்லியான அழகியாக நடித்து இளைஞர்களை இழுத்தார். இப்போது, இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்திவேல் வாசுவுடன் ‘7 நாட்கள்’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் ‘குண்டூர் டாக்கீஸ்-2’ படத்திலும், ‘100 டிகிரி செல்சியஸ்’ படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறாராம்..!
error: Content is protected !!