இயக்குநர் பிரதீப்-சிபிராஜ்-சத்யராஜ் கூட்டணியில் இணையும் நந்திதா ஸ்வேதா.

இயக்குநர் பிரதீப்-சிபிராஜ்-சத்யராஜ் கூட்டணியில் இணையும் நந்திதா ஸ்வேதா.

கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் இருவரும் இணைந்து ஒரு சஸ்பென்ஸ்-திரில்லர் கலந்த திரைப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்கிறார். மேலும் நாசர், சம்பத் மற்றும் பல முக்கிய திரையுலகப் பிரபலங்களும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர்.

இப்போது இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க நந்திதா ஸ்வேதா தேர்வாகியுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று பல மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நந்திதா ஸ்வேதா, சிபிராஜூடன் ஜோடி சேர்வது இதுவே முதல்முறை.

இந்தப் புதிய படத்தை ‘சைத்தான்’, ‘சத்யா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரான பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கவிருக்கிறார்.

dhananjayan

இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறித்து கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஜி.தனஞ்செயன் கூறுகையில், “இந்தப் படத்தின் நாயகியாக நந்திதா ஸ்வேதாவை அறிவிப்பதில் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப பன்முகத் திறமையை வெளிப்படுத்தி, அனைவரிடமும் பாராட்டுக்களை குவிப்பதில் வல்லவர் நந்திதா. அவரது ஈடுபாடு இப்படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நானும், இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும் தற்போதைய நடிகைகளின் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு தேடியதில்,  நந்திதா ஸ்வேதாவின் நடிப்பு திறன் மற்றும் தமிழ் மொழியைப் பேசும் திறமையைக் கண்டு அவர்தான் சரியான தேர்வாக இருப்பார் என்று உணர்ந்தோம். இதனால் அவரையே தேர்வு செய்திருக்கிறோம்.

இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும், சிபிராஜூம் சமீபத்திய வெற்றி படமான ‘சத்யா’ படத்திற்குப் பிறகு இப்படத்தில் இணைவதால் இந்தப் படம் பற்றி அறிவிப்பு வெளியான உடனேயே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சைமன் கே.கிங்கின் இசையும், ஜான் மகேந்திரனின் வசனங்களும் ஏற்கனவே இந்த படத்திற்கு கூடுதல் தூணாக மாறிவிட்டன.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019 நவம்பரில் தொடங்கி 2020 ஜனவரியில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும். அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பிரம்மாண்டமான முறையில் 2020, மார்ச் மாதம் இத்திரைப்படம் வெளியிடப்படும்…” என்றார்.




error: Content is protected !!