ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் புதிய படம் துவங்கியது..!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் புதிய படம் துவங்கியது..!

தன்னுடைய திரையுலகப் பயணத்தின் 2-வது சுற்றில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் நடிகை ஜோதிகா.

திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த ’36 வயதினிலே’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’ படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

தனக்கு முக்கியத்துவம் தரும் கதை மட்டும்தான் வேண்டும் என்றில்லாமல், நிஜ வாழ்க்கையோடு ஒன்றி போகும் கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் கவனமாக இருக்கிறார் ஜோதிகா. அதற்கு சான்றாக இந்த வாரம் வெளியாகிறது அவர் நடித்த ‘காற்றின் மொழி’ திரைப்படம்.

இப்படம் வெளியாவதற்கு முன்பே ஜோதிகாவைப் பற்றியும், படத்தைப் பற்றியும் மிகுந்த எதிர்பார்ப்பை குறிப்பாக பெண்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், ஜோதிகாவின் நடிப்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தனது 21-வது படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் S.R.பிரகாஷ் மற்றும் S.R.பிரபு இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.

இந்தப் புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குநர் S.ராஜ் இயக்குகிறார்.

இசை – ஸீன் ரோல்டன், ஒளிப்பதிவு – கோகுல் பென்னி, படத் தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை – பவல் குமார், வசனம் – பாரதி தம்பி, சண்டை பயிற்சி – சுதேஷ்,  தயாரிப்பு நிர்வாகம் – அரவிந்த் பாஸ்கரன், மேலாளர்கள் – சிராஜ் & ராஜாராம் மற்றும் மக்கள் தொடர்பு – ஜான்சன்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு நேற்று நடந்தது. இந்த வார இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும்.