“உண்மையான ‘சைத்தான்’ யாரென்று தியேட்டரில்தான் தெரியும்..” ஹீரோயின் அருந்ததி நாயர் பேட்டி..!

“உண்மையான ‘சைத்தான்’ யாரென்று தியேட்டரில்தான் தெரியும்..” ஹீரோயின் அருந்ததி நாயர் பேட்டி..!

விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து, சைக்காலாஜிக்கல்  - திரில்லர் பாணியில்  அறிமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் ‘சைத்தான்’ திரைப்படம் வரும் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

saithan stills-1

இத்திரைப்படம் எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ஆ’ என்கிற நாவலின் அடிப்படையில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக கேரளாவில் இருந்து உதயமாகி இருக்கும் அருந்ததி நாயர் நடித்திருக்கிறார்.  

இந்தப் பட அனுபவம் பற்றி அருந்த்தி நாயர் பேசுகையில், "மனித வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு 'சைத்தான்'னை வரவேற்க ஒட்டுமொத்த தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களும் காத்து கொண்டிருக்கிறார்கள். என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிக பெரிய மைல் கல்லாக அமைந்திருக்கும் இந்த 'சைத்தான்' எனக்கு தேவதை......" என்று மெல்லிய புன்னகையோடு துவங்குகிறார் வணிகவியல் பாடத்தில் பட்டம் பெற்று இருக்கும் அருந்ததி நாயர். 

saithaan movie stills

"என் மீது நம்பிக்கை வைத்து, என்னை இந்த ‘சைத்தான்’ படத்திற்காக தேர்ந்தெடுத்த விஜய் ஆண்டனி சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 'ஐஸ்வர்யா' என்னும் வலுவான  கதாபாத்திரம் மூலம் என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை பெற்று தந்திருக்கிறது ‘சைத்தான்’ என்பதை நான் பெருமையாக சொல்லுவேன். 

பொதுவாகவே வளர்ந்து வரும் பிற மொழி பேசும் கதாநாயகிகளுக்கு, அவர்களின் சொந்த குரலில் டப்பிங் செய்வதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் விஜய் ஆண்டனி சார் என்னை என்னுடைய சொந்த குரலிலேயே ‘சைத்தான்’ படத்தில் பேச செய்திருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

img_8881

‘சைத்தான்’ பார்ப்பதற்கு சாதுவாகவும், எளிமையாகவும் இருக்கலாம், ஆனால் வருகின்ற டிசம்பர் 1-ம் தேதி அந்த  'சைத்தான்'னின் உண்மையான அவதாரத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள்...." என்று மிரட்டும் தோரணையில் கூறுகிறார் அருந்ததி நாயர்.