“அடஜ்ஸ்ட்மெண்ட் எல்லா துறையிலேயும் இருக்கே…?!” – நடிகை அர்த்தனாவின் போல்டான பேச்சு..!

“அடஜ்ஸ்ட்மெண்ட் எல்லா துறையிலேயும் இருக்கே…?!” – நடிகை அர்த்தனாவின் போல்டான பேச்சு..!

இளமை துள்ளும் சிரிப்பு, துறு துறு கண்களில் கொஞ்சும் மலையாளக் குரலில் திக்கி திக்கி மழலைத் தமிழ் பேசுகிறார் நடிகை  அர்த்தனா. 

‘தொண்டன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இப்போது ‘செம’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை  கொண்ட அர்த்தனா தனது திரையுலகப் பிரவேசம் பற்றியும், அனுபவம் பற்றியும் பேசுகிறார்.

“உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்? எப்படி சினிமாவிற்குள் வந்தீர்கள்…?” 

“அப்பா, அம்மா நான் எல்லாரும் திருவனந்தபுரம்தான். படிச்சது எல்லாமே அங்கதான். நான் அப்பா, அம்மா செல்லம். சின்ன வயசிலிருந்தே நடிப்பு எனக்கு பிடிச்ச விசயம். ஸ்கூல்ல படிக்கும்போதே டிராமா, கல்ச்சுரல் எல்லாவற்றிலும் நடிப்பேன். ஸ்கூல் முடிக்கும்போதே நான் டிவியில் தொகுப்பாளராக  பண்ண ஆரம்பிச்சுட்டேன். 

arthana

காலேஜ்ல விஸ்காம் முடிச்ச பின்னாடி ஒரு மலையாளப் படத்துல சுரேஷ் கோபி சாரோட கசினுக்கு ஜோடியா நடிக்கிற வாய்ப்பு வந்தது. அதற்குப் பிறகு ஒரு தெலுங்கு படம் பண்ணினேன். அப்புறம்தான் சமுத்திரக்கனி சார் மூலமா ‘தொண்டன்’ படம் வாய்ப்பு கிடைத்தது. இப்ப தமிழில் மூணு படங்கள் பண்ணிட்டேன். 

ஒவ்வொரு இடத்திலேயும் ஒவ்வொண்ணுமே ஸ்பெஷல்தான். நான் தமிழ்ல தான் மூணு படம் பண்ணிருக்கேன். மத்த மொழில ஒரு படம்தான் பண்ணிருக்கேன். தமிழ்தான் இப்போதைக்கு எனக்கு நெருக்கம்.”

‘செம’ பட அனுபவம் எப்படி இருந்தது…?” 

“செம’ படம் பத்தி சொல்லணுமுன்னா நிறைய அனுபவம் கத்துக்கிட்டேன். ‘செம’ படத்துல நிறைய புடிச்சியிருந்துச்சி ஷூட்டிங் பண்ணின இடம்.. மாட்டு வண்டிகள்ன்னு நிறைய சொல்லலாம். ஜி.வி.பிரகாஷ் ரொம்ப நல்ல மனிதர் ஒரு பெரிய நடிகர் போல இல்ல… நல்லா பேசினாரு… நிறைய எங்கரேஜ் பண்ணாரு.

sema movie stills

‘செம’ படம் என்ன நிறைய இடத்துக்கு கொண்டு போயிருக்கு. ‘செம’ படம்  மூலமா கிடைச்ச வாய்ப்புதான் ‘கடைக்குட்டி சிங்கம்.”

“கடைக்குட்டிச் சிங்கம்ல என்ன ரோல் பண்றீங்க ? அந்தப் படம் எப்படி வந்திருக்கு..?” 

“ஷூட்டிங் முழுக்க முடிஞ்சிடிச்சு. அதில மூணு ஹிரோயின்ஸ் நடிச்சிருக்கோம். நானும் ஒரு கேரக்டர். இது முழுக்க கிராமத்துல வாழுற ஒரு குடும்பத்த பத்தின கதை. ரொம்ப நாளைக்கு அப்புறம் குடும்ப பிரச்சனைகள பேசுற படமா, குடும்பத்தோடு பாக்குற படமா இது இருக்கும். பாண்டிராஜ் சாரோட ‘பசங்க’ பட மாதிரி ஒரு எமோசனல் டிராவல் இதுல இருக்கும்.  படத்துல நான் கிராமத்து பெண்ணா நடிக்கிறேன். இப்போதைக்கு இது மட்டும் சொல்லத்தான் அனுமதி. படம் வர்றப்ப இன்னும் நிறைய பேசலாம்.” 

படத்தில் உங்களோட சேர்த்து மூணு ஹீரோயின்ஸாச்சே.. ஈகோ, சண்டைகள் எதுவும் வரலையா ? 

“எனக்கு எப்பவும் வராது, யார் என்ன பண்ணினாலும் நம்ம வேலையை கரைக்ட்டா பண்ணிட்டா எந்தப் பிரச்சனையும் இல்ல. நான் ரொம்ப அமைதி. எனக்கு எப்பவும் ஒரு நல்ல நடிகையா பேர் எடுத்தாலே எனக்கு போதும்.”

arthana

“உங்களுடைய கனவு ரோல், கேரக்டர்… இப்படி  எதுவும் இருக்கா…?” 

“எனக்கு சோசியல் கருத்துக்கள் பத்தி பேசற படத்துல நடிக்கணும். ஒரு பயாக்கிராஃபி படத்தில நடிக்கணும்.  ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்கணும். அப்புறம் மன நலம் பத்தி நிறைய பேசுற அத சரியா அணுகுற ஒரு படத்தில கண்டிப்பா ஒரு ரோல் பண்ணனும். இன்னும் சொல்லிக்கிட்டே இருப்பேன். இப்போதைக்கு இது போதுமே…!” 

“சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்மெண்ட் பத்தி இப்போ வெளிப்படையா பெண்கள் பேசுறாங்க.. அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன…?” 

“ஆமா. வெளிப்படையா பேசப்படுறதே நல்லதுதானே…! இது இந்தத் துறையில் மட்டும் இல்ல. எல்லாத் துறையிலும் இருக்கு. எனக்கு இதுவரை இந்த மாதிரி நடந்ததில்லை. அதற்காக இது சினிமாவில் கிடையாதுன்னு சொல்லல. இருக்கலாம்.

பெண்கள் வெளியில் வரும்போது இந்த மாதிரி நடப்பது சகஜம்தான். ஆனால் உங்கள் சம்மதம் இல்லாமல் உங்கள யாரும் எதுவும் பண்ணிட முடியாது. எப்படி ‘நோ’ சொல்வது என்பது எனக்குத் தெரியும். மறுக்க தெரிந்தால் போதும். இதைத் தவிர்க்க முடியும். ‘நோ’ சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். இதைத் தாண்டித்தான் பெண்கள் முன்னேற வேண்டும்.” 

6W3B1440

“நீங்கள் இதுவரை நடித்த படங்கள் அனைத்திலும் குடும்பப் பெண்ணாக நடித்திருக்கிறீர்கள். இனிமேல் கவர்ச்சியாக நடிப்பீர்களா..? மாடர்ன் பெண்ணாக நடிப்பீர்களா..?” 

“எனக்கே ஒரே மாதிரி ரோல் பண்ணுவது போல்தான் இருக்கிறது. இதில் மாட்டிக் கொள்ளக் கூடாது. இதிலிருந்து மாறி நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. மாடர்ன் ரொல்கள் பண்ண நான் ரெடி. கவர்ச்சி என்பது பார்ப்பவரை பொருத்தது. நான் எனக்கு செட்டாகிற உடைகள் போட்டு நடிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் ரெடி..!”