‘ஜீ.வி.’ நாயகன் வெற்றி நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது

‘ஜீ.வி.’ நாயகன் வெற்றி நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது

ஜெ.என். சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பார்த்தசாரதி தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ‘ஜீ.வி.’ படப் புகழ் வெற்றி நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் புதிய படத்தை குரு ராமானுஜம் இயக்குகிறார். இவர் ‘கழுகு’ படத்தில் இயக்குநர் சத்ய சிவாவிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். இப்படம் சமூக விழிப்புணர்வு மற்றும் கமர்ஷியல், சென்டிமென்ட் கலந்த திரில்லர் படமாக உருவாகவுள்ளது.

படத்தில் வெற்றி நாயகனாக நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக தியா மயூரிகா நடிக்கிறார். குணச்சித்திர பாத்திரத்தில் மாரிமுத்து நடிக்க, ‘கே.ஜி.எஃப்.’ படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

தயாரிப்பு – பார்த்தசாரதி, இயக்கம் – குரு ராமானுஜம், வசனம் – சி.முருகேஷ் பாபு, புகைப்படம் – பாஸ்கர், ஒளிப்பதிவு – எஸ்.ராமலிங்கம், படத் தொகுப்பு – ராஜா முகமது, கலை இயக்கம் – எஸ்.பத்மநாபன், சண்டை இயக்கம் – சுதேஷ், மக்கள் தொடர்பு – பிரியா, தயாரிப்பு உருவாக்கம் – அபிமன்னன் எம்.ஏ., தயாரிப்பு நிறுவனம் – ஜெ.என். சினிமாஸ்.

இப்படத்தின் படப்பிடிப்பு இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் பூஜையுடன் இன்று காலை துவங்கியது.

படத்தைப் பற்றிய மற்ற விபரங்களை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவுக்கவுள்ளது.

 




error: Content is protected !!