‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் நடிகர் ‘டினி டாம்’..!

‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் நடிகர் ‘டினி டாம்’..!

மலையாள சினிமாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் கலக்கிய ‘கலாபவன் மணி’யைப் போலவே ‘கலாபவனிலிருந்து’ உருவான திறமையான நடிகர் மற்றும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் டினி டாம்.

இவர் இப்போது ஒரு வில்லன் நடிகராக ‘ஆபரேஷன் அரபைமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

Operation_Arapaima_TiniTom7

நடிகர் டினி டாம் ஏற்கெனவே ‘பஞ்ச பாண்டவர்’, ‘பட்டாளம்’, ‘பிராஞ்சியேட்டன் அண்ட் தி செயின்ட்’, ‘இன்டியன் ருபி’, ‘பியூட்டிஃபுல்’, ‘ஸ்பிரிட்’ உள்பட பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

இந்த ‘ஆபரேஷன் அரபைமா’ படத்தில் ரகுமானுக்கு வில்லனாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் டினி டாம்.

Operation_Arapaima_TiniTom1

இந்தப் படத்திற்குப் பின் தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர்கள் வரிசையில் டினி டாம் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

‘ஆபரேஷன் அரபைமா’, படத்தின் இயக்குநரான ப்ராஷ், முன்னாள் இந்தியக் கடற்படை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!