“தமிழ் சினிமாவி்ல் நல்ல தமிழ் ஒலிக்கக் காரணமானவர் கலைஞர்…” – நடிகர் சிவக்குமார் புகழாரம்..!

“தமிழ் சினிமாவி்ல் நல்ல தமிழ் ஒலிக்கக் காரணமானவர் கலைஞர்…” – நடிகர் சிவக்குமார் புகழாரம்..!
கலைஞர் கருணாநிதியின் மரணத்திற்கு நடிகர் சிவக்குமார் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.
1. பெரியார் , ராஜாஜிக்கு பிறகு  95 வயதுவரை புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர்  கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.
2.பெரியார் – எந்த ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்துக்கு திட்டங்கள் தீட்டினாரோ அவற்றை கலைஞர் அவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த உடனே நிறைவேற்றினார்.
3. அண்ணா அவர்கள் துவங்கிய திராவிட முன்னேற்ற கழகத்தை கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கட்டிக் காத்தவர் .
4. அரசியலில் சாதித்ததற்கு இணையாக – கலை இலக்கியத்திலும்  60 ஆண்டுகளுக்கு மேல்  சாதனை புரிந்தவர் .
5. 1950-களில்  தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் ஒலிக்க காரணமானவர்களில் முதன்மையானவர் .
6. குறளோவியம், சங்கத் தமிழ், தொல்காப்பியப் பூங்கா – போன்றவை அவரது புலமைக்குச் சான்றானது .
7. பாசப் பறவைகள், பாடாத தேனீக்கள் – படங்களில் அவர் வசனம் பேசி நடித்தேன் .
8. என் ஓவியங்களை பார்க்க 30 ஆண்டுகளுக்கு முன் எங்கள் இல்லம் வந்து 2 மணி நேரம் இருந்தார் .
9. சூர்யாவின் முதல் படம் ‘நேருக்கு நேர்’ – கார்த்தியின் முதல் படம் ‘பருத்தி வீரன்’ பார்த்து ஆசி கூறியவர் .
10.தமிழகத்தில் அவர் இடம் என்றும் காலியாகவே இருக்கும். 
அன்னாரது ஆத்மா சாந்தியடையவும் / பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.