சசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் கிரைம் திரில்லர் படம்..!

சசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் கிரைம் திரில்லர் படம்..!

‘நான் அவனில்லை’, ‘அஞ்சாதே’, ‘பாண்டி’, ‘வன்மம்’, ‘மாப்பிள்ளை’, ‘டிக் டிக் டிக்’ உள்பட பதிமூன்று படங்களைத்   தயாரித்த நெமிச்சந்த் ஜெபக் நிறுவனம் சார்பாக ஹித்தேஷ் ஜெபக் புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறார். இந்தப் படம் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜெபக்கின் 14-வது தயாரிப்பாகும்.

கிரைம் அண்ட் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் டைப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் நாயகன்  குரு சோமசுந்தரமும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  கதாநாயகியாக   மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்கிறார்.  

மேலும், இப்படத்தில் இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், ‘பசங்க’ சிவக்குமார், சுஜாதா, வித்யா ப்ரதீப், மஞ்சு பெத்து ரோஸ் மற்றும் பலர்  நடிக்கின்றனர்.

இசை – ரோனி ராப்பில், ஒளிப்பதிவு – எஸ்.கோபிநாத், படத் தொகுப்பு – கே.ஜே.வெங்கட்ரமணன், சண்டை இயக்கம் – அன்பறிவ், வசனம் – அருள் செழியன், கலை இயக்கம் – சிவக்குமார் யாதவ்.

மலையாளத்தில் ‘காலேஜ் டேஸ்’, ‘காஞ்சி’, ‘டியான்’ ஆகிய தரமான படங்களைத் தந்த ஜி.என்.கிருஷ்ணகுமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இப்படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். படம் முழுதும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்பதால் பார்வையாளரை படம் தன் வசப்படுத்திக் கொள்ளும்விதமாக கதை, திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

தற்போது இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.