நடிகர் சங்க கட்டட விவகாரம் – நடிகர் நாசருக்கு நடிகர் சரத்குமாரின் பதில்..!

நடிகர் சங்க கட்டட விவகாரம் – நடிகர் நாசருக்கு நடிகர் சரத்குமாரின் பதில்..!

நடிகர் சங்கக் கட்டட விவகாரம் தொடர்பாக நேற்று நாம் வெளியிட்ட பூச்சி முருகனின் அறிக்கைக்குப் பின்னர் அது தொடர்பாக நம்மை antony29joe@gmail.com என்ற இணைய முகவரி மூலம் தொடர்பு கொண்ட ஆண்டனி என்கிற அன்பர் அந்தக் கட்டுரை பூச்சிமுருகனை முன்னிலைப்படுத்தி ஒரு சார்பானதாக எழுதப்பட்டுள்ளது என்று வருத்தப்பட்டார்.

அதோடு பூச்சி முருகன் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தி.மு.க. தொழிற்சங்கத்தின் புகார் மனுவின் புகைப்பட காப்பிகளை அனுப்பி வைத்திருந்தார். ஆனால் அவைகள் நடிகர் சங்கம் தொடர்பானதாக இல்லை என்பதால் நாம் அதை வெளியிடவில்லை.

கட்டட விவகாரம் தொடர்பாக சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி தரப்பினர் தங்களது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தால் நிச்சயம் அதை வெளியிடுவோம் என்று அவருக்கு மெயில் மூலமாகவே தெரிவித்தேன். 

கடந்த மாதம் 29-ம் தேதியன்று நடிகர் நாசர் சங்கத்தின் தலைவர் சரத்குமாருக்கு அனுப்பியிருந்த கடிதத்தையும் நாம் வெளியிட்டிருந்தோம். அந்தக் கடிதத்திற்கு நடிகர் சரத்குமார் கடந்த 5-ம் தேதியன்று வெளியான ‘மாலைமலர்’ பத்திரிகையில் விளக்கம் கொடுத்திருப்பதாக நண்பர் ஆண்டனி மீண்டும் மெயிலில் சொன்னதோடு இல்லாமல், அதன் போட்டோ காப்பியையும் மெயிலில் அனுப்பியிருந்தார்.

நடிகர் சரத்குமாரின் இந்த அறிக்கையை எங்களுக்கும் அதே நாளில் அனுப்பியிருந்தால் அன்றைக்கே நாங்களும் இதனை கண்டிப்பாக வெளியிட்டிருப்போம் என்பதை அந்த அன்பருக்குச் சொல்லிக் கொள்கிறோம்.

நாசர், சரத்குமாருக்கு எழுதிய கடிதம் பற்றிய செய்தி இத்தளத்தில் உள்ளது. 

http://www.tamilcinetalk.com/actor-poochee-murugan-statement-about-actors-union-building-crisis/

நடிகர் நாசருக்கு, நடிகர் சரத்குமார் எழுதிய மறு்ப்பு அறிக்கை கீழே போட்டோ காப்பியாக உள்ளது. தரவிறக்கம் செய்தும், விரித்தும் படித்துப் பாருங்கள். வேறு வழியில்லை..! தட்டச்சு செய்து போட எனக்கும் நேரமில்லை. மன்னிக்கவும்..! 

sarathkumar-answer-nasser




error: Content is protected !!