“பார்த்திபன் என்னை ரகசியமாக உளவு பார்த்தார்…” – நடிகர் சாந்தனு பேட்டி

“பார்த்திபன் என்னை ரகசியமாக உளவு பார்த்தார்…” – நடிகர் சாந்தனு பேட்டி

இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இயக்கத்தில், சாந்தனு கதாநாயகனாக நடித்திருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் வருகின்ற ஜனவரி 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர், மற்றும் டிரைலர்கள் சினிமா ரசிகர்களிடம் அமோக பாராட்டுகளை பெற்றுள்ளது. பிரபுதேவாவின் நடன இயக்கத்தில், சாந்தனு நடனம் ஆடி இருக்கும் ‘டமுக்காட்லான் டுமுக்காட்டலான்’ பாடல், நடிகர் தனுஷ் உட்பட ஒட்டு மொத்த தமிழ் திரையுலகினரின் பாராட்டுகளையும் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 

santhanu

இந்தப் படம் பற்றிப் பேசிய நடிகர் சாந்தனு, “பார்த்திபன் சார் என்னை ஒரு நாள் அழைத்து, நான் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்ற படத்தை இயக்கப் போறேன். அதில் நீதான் கதாநாயகன். நாளை முதல் படப்பிடிப்பு’ என்றார்.

ஆரம்பத்தில் எனக்கு சற்று மகிழ்ச்சி கலந்த ஆச்சரியமாக இருந்தாலும், பார்த்திபன் சார் மீதும், அவருடைய கதை மீதும் நான் வைத்திருக்கும் ஆணித்தனமான நம்பிக்கையால், என்ன கதை என்பதைக்கூட கேட்காமல், படப்பிடிப்புக்கு தயாராகி விட்டேன். சிறிது நாட்களுக்கு பிறகுதான், பார்த்திபன் சார் என்னை இந்த படத்திற்காக ரகசியமாக கண்காணித்து வந்தார் என்பதை தெரிந்து கொண்டேன். 

ஒரு திரைப்படத்தில் வழக்கமாக இருக்கும் அம்சங்களை மாற்றி, ஒரு வித்தியாசமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குபவர் பார்த்திபன் சார். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. நிச்சயமாக ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் மூலம், ரசிகர்கள் ஒரு புதிய சாந்தனுவை காண்பார்கள்…” என்று நம்பிக்கையுடன் கூறினார் சாந்தனு.




error: Content is protected !!