full screen background image

நன்றியறிவிப்பு கூட்டத்தில் பாதியிலேயே தப்பிச் சென்ற நடிகர் சங்கத் தலைவர் நாசர்..!

நன்றியறிவிப்பு கூட்டத்தில் பாதியிலேயே தப்பிச் சென்ற நடிகர் சங்கத் தலைவர் நாசர்..!

கடந்த 2 ஆண்டுகளாக படாதபாடுபட்டு அல்லும் பகலும் அயராது உழைத்து பெரும் சிரமத்திற்கிடையில் பெற்ற வெற்றியை முழுமையாக பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறார் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர்.

எல்லாம் டாக் ஸ்லிப்புதான். நேற்று முன்தினம் விகடன்.காமுக்கு அளித்த பேட்டியில் “ரஜினியைவிடவும் எனக்கு ஒரு சதவிகிதமாவது தமிழுணர்வு அதிகமாக இருக்கிறது…” என்று சொன்னதன் பலனை இன்றைக்கே அனுபவித்துவிட்டார் தலைவர் நாசர்.

பாண்டவர் அணியினர் தங்களது வெற்றிக்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இன்று காலை கிரீன் பார்க் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு வருகை தந்தனர்.

காலையிலேயே சங்கத்தின் புதிய செயற்குழுவின் முதல் கூட்டம் நடந்து முடிந்திருந்த்து. அதில் கலந்து கொண்டுவிட்டு அப்படியே பாண்டவர் அணியினர் இந்தப் பக்கம் வந்துவிட்டனர்.

IMG_4896

முதல் ஆளாக வந்து காத்திருந்தார் நாசர். பின்பு ஒவ்வொருவராக வரவும் ஒரு மணி நேரம் கழித்து 11.40 மணிக்குத்தான் அனைவரும் மேடையேறினார்கள். முதலிலேயே மைக்கை பிடித்த நாசர் “தங்களுடைய வெற்றிக்காக உதவி செய்த அனைத்து மீடியா நண்பர்களுக்கும், கடுமையாக உழைத்த பாண்டவர் அணியைச் சேர்ந்தவர்களுக்கும், வாக்களித்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி…” என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

paandavar team success meet stills

திரும்பவும் பேசுவார். இது ச்சும்மா டிரையலுக்குத்தான் என்று நினைத்தார்கள் பத்திரிகையாளர்கள். சரியாக இந்த நேரம் பார்த்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தாணு தலைமையில் ஒரு டீம் மேடையிறி வந்து பொன்னாடைகளை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தது. பின்பு இயக்குநர் சங்கத்தின் சார்பில் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு ஆகியோர்  வந்து  புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர். பின்பு பெப்சி நிர்வாகிகள், மற்றும் சில சங்கத்தினர் தொடர்ச்சியாக பல பொன்னாடைகளை கொண்டு வந்து குவித்துவிட்டனர்.  

பொன்னாடை போர்த்தும் படலம் முடிவுற்ற பிறகு, தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான தாணு முதலில் மைக்கை பிடித்து வெற்றி பெற்றவர்களை வாழ்த்திய கையோடு,  ‘நம்பிக்கை என்றால் அது நாசர்.. நாணயம் என்றாலும் அதுவும் நாசர்தான்’ என்று வாழ்த்திவிட்டுப் போனார். இவர் சென்றவுடன் தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்சியின் நிர்வாகிகள், மற்ற சங்கத்தினர் என அனைவருமே கிளம்பிச் சென்றுவிட்டார்கள்.

இது முடிந்தவுடன் விஷால் பேசத் துவங்கினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே நாசர் எழுந்து மேடையின் பின்புறமாக யாரிடமோ பேசும் தோரணையில் சென்றவர், திடீரென்று அரங்கத்தில் இருந்து வெளியேறிவிட்டார். அவருடைய கைப்பையை மேடையில் இருந்த இன்னொருவர் எடுத்துச் சென்று, வெளியில் போய் கொடுத்துவிட்டு வந்தார்.

திரும்பி வருவார் என்று எதிர்பார்த்தால் வராமலேயே எஸ்கேப். பின்புதான் தெரிந்த்து ரஜினியைப் பற்றிய கமெண்ட்டிற்கு கண்டிப்பாக கேள்விகள் பறந்து வரும். பதில் சொல்ல வேண்டி வருமே என்கிற தயக்கத்துடன் நாசர் தப்பிச் சென்றிருப்பது புரிந்தது.

இப்படி பாண்டவர் அணியின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே, தலைவர் இல்லாமலேயே துணைத் தலைவர் பொன்வண்ணின் மேற்பார்வையில் செயலாளர் விஷாலும், பொருளாளர் கார்த்தியுமே கூட்டத்தை சமாளித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து கூட்டத்தை நிறைவு செய்தார்கள்.

தலைவர் இன்னைக்கு தப்பிச்சிட்டாரு.. அடுத்த மீட்டிங்ல பார்த்துக்குவோம்..!

Our Score