பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம்..!

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம்..!

‘தேவ்’ பட வெளியீட்டுக்குப் பின்னர் வித்தியாசமான கதை அம்சமான ‘கைதி’ என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்த புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதைக்களமான இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ரஷ்மிகா மண்டன்னா தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். 

ஒளிப்பதிவு – சத்யன் சூரியன், படத்தொகுப்பு – ரூபன், தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன், கலை இயக்கம் – ஜெய், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், தயாரிப்பு மேற்பார்வை – P.S.ராஜேந்திரன், நிர்வாகத் தயாரிப்பு – அரவிந்தராஜ் பாஸ்கரன், இசை – விவேக் – மெர்வின், எழுத்து, இயக்கம் – பாக்யராஜ் கண்ணன்.

Karthi_19 (9)     

இன்னமும் பெயர் சூட்டப்படாமல் இப்போதைக்கு ‘கார்த்தி 19’ என்ற பெயரில் அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் ஆரம்பமானது.

இந்த விழாவில் கார்த்தி, ரஷ்மிகா மண்டன்னா, இயக்குநர் பாக்யராஜ் கண்ணன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக சென்னையில் சில இடங்களில் பெரிய செட் போடப்பட்டுள்ளது.
error: Content is protected !!