நடிகர் ஜெய்யின் 25-வது படம் ‘லவ் மேட்டர்’

நடிகர் ஜெய்யின் 25-வது படம் ‘லவ் மேட்டர்’

நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் சத்தமே இல்லாமல் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். ‘லவ் மேட்டர்’ என்கிற இந்தப் படம் எஸ்.ஏ.சி. இயக்கும் 70-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் நாயகனாக ஜெய் நடிக்கிறார். ஜெய்க்கு இந்த ‘லவ் மேட்டர்’ திரைப்படம் 25-வது படமாகும். நாயகிகளாக வைபவி, அதுல்யா இருவரும் நடிக்கின்றனர்.

இசை – சித்தார்த், ஒளிப்பதிவு – ஜீவன், தயாரிப்பு & இயக்கம் – எஸ்.ஏ .சந்திரசேகரன்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் பற்றி நடிகர் ஜெய் பேசும்போது, “காதல், நட்பு, ஜாலி, சுவாரஸ்யம் எல்லாம் கலந்த இந்த ‘லவ் மேட்டர்’ திரைப்படம் எனது 25-வது படமாக அமைந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

முழுக்க முழுக்க 20-வயதுக்குட்பட்ட இளம் உதவியாளர்களுடன் இயக்குநர் எஸ்.ஏ.சி 20 வயது இளைஞரை போல செட்டில் பணியாற்றியது எங்களை வியக்க வைத்தது. இளம் தலைமுறையினருக்கு பிடித்த அம்சங்களுடன் இந்தப் படம் உருவாகிறது. வெளியில் கண்டிப்பான இயக்குநர் என்ற பெயர் எஸ்.ஏ.சி.க்கு உண்டு. ஆனால் எல்லோரையும் ப்ரியாக விட்டு ஜாலியாக படமாக்கிய விதம் அருமை. அதனாலேயே நான் மட்டுமல்லாது எல்லோரும் ஒரு ஜாலி மூடோடு நடித்து வருகிறோம்.

விஜயகாந்த், விஜய்யை வைத்து அவர் இயக்கி வெற்றி பெற்ற பல படங்களில் கதாநாயகர்களின் பெயர் விஜய். எனவே ‘லவ் மேட்டர்’ படத்தில் கார்த்தி என்ற எனது கதாபாத்திரத்தை விஜய் என்று வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் அதற்கு சந்தோஷமாக ஒத்து கொண்டார்.

‘லவ் மேட்டர்’ படத்தை பொறுத்தவரை கலகலப்புடன் நடித்ததை என்னால் உணர முடிந்தது…” என்றார் ஜெய்.




error: Content is protected !!