‘ஜடா’ படம் மூலமாக வில்லனாக கவனத்தை ஈர்த்திருக்கும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

‘ஜடா’ படம் மூலமாக வில்லனாக கவனத்தை ஈர்த்திருக்கும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் ‘ஜடா’. இந்தப் படத்தில் நாயகன் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். சாம்.சி.எஸ். இசையமைக்க, சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

இதே படத்தில் பிரபல ஓவியரான ஏ.பி. ஏ.பி.ஸ்ரீதர் மிக முக்கியமான வில்லன் வேடத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

வண்ண ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கை வண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3-டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போது நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே ‘ஆந்திரா மெஸ்’ படத்தில் வில்லனாக நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். இப்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கும் இவரது கதாபாத்திரம் பலரையும் கவனத்தில் ஈர்த்திருக்கிறது.

AP Shreethar 3

ஒரு வில்லனின் கதாபாத்திரம் பார்க்கும் ரசிகர்கள் கோபப்பட வைப்பதுதான். அந்த கோபத்தை பார்ப்பவர்களிடத்தில் ஏற்படுத்தி இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். படத்தில் இவருடைய அறிமுக காட்சியிலும் சரி, மகனுக்காக பழி வாங்கும் காட்சியிலும் சரி பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார். 

பக்கம் பக்கமாக வசனங்கள் பேசி கவர நினைப்பவர்கள் பலர் இருப்பினும், பார்வையாலயே மிரட்ட தனித்தன்மை வேண்டும். அந்த தனித்தன்மையை பெற்று இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். படத்தில் இவரது மிரட்டலான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதன் மூலமாக ஓவியம் மட்டுமல்ல நடிப்பிலும் நான் கில்லாடி என்பதை தற்போது நிரூபித்திருக்கிறார் ஸ்ரீதர்.

AP Shreethar 4

இப்படம் குறித்து ஏ.பி.ஸ்ரீதர் கூறும்போது, “நான் வில்லனாக நடித்த அறிமுக இயக்குநரான குமரன் இயக்கியிருக்கும் ‘ஜடா’ திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்த அனைவரும் என் நடிப்பைப் பார்த்துப் பாராட்டுகிறார்கள். என்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் படக் குழுவினருக்கே சேரும்.

படக் குழுவினரின் கூட்டு முயற்சியால்தான் என்னுடைய நடிப்பு கவனம் பெற்றிருக்கிறது. தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது…” என்றார்.




error: Content is protected !!