கல்வித் துறை ஊழல்களை அம்பலப்படுத்தும் ‘அச்சமின்றி’ திரைப்படம்

கல்வித் துறை ஊழல்களை அம்பலப்படுத்தும் ‘அச்சமின்றி’ திரைப்படம்

டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ் பட நிறுவனம் தயாரித்த ‘என்னமோ நடக்குது’ படத்தின் வெற்றியை தொடர்ந்து. அடுத்து தயாரிக்கும் படம் ‘அச்சமின்றி’.

இதில் விஜய் வசந்த் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மற்றும் சமுத்திரகனி, கருணாஸ், ராதாரவி, வித்யா, சரண்யா, தேவதர்ஷினி, சண்முகசுந்தரம், ‘கும்கி’ அஸ்வின், ரோகிணி, தலைவாசல் விஜய், இவர்களுடன் வில்லன்களாக பரத் ரெட்டி, ஜெயகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – A.வெங்கடேஷ், இசை – பிரேம்ஜி அமரன், பாடல்கள் – யுகபாரதி, கலை – சரவணன், படத் தொகுப்பு – பிரவீன்.K.L., சண்டை பயிற்சி – கணேஷ் குமார்,  நடனம் – விஜி சதீஷ், தயாரிப்பு மேற்பார்வை – சொக்கலிங்கம், வசனம் – G.ராதாகிருஷ்ணன், தயாரிப்பு –  டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ்  V.வினோத்குமார். கதை, திரைக்கதை, இயக்கம் ராஜபாண்டி.                                                                                        

படம் பற்றி இயக்குநர் ராஜபாண்டி பேசும்போது, “பிக்பாக்கெட்காரனாக தனக்குப் பிடித்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வரும் விஜய் வசந்தை போலீஸ் உளவாளி என தவறாக புரிந்து கொள்கிறார் சிருஷ்டி டாங்கே. இதன் பின்பு உண்மை தெரிந்து இருவரும் காதலிக்கிறார்கள்.

ஒரு சூழலில் ஏன், எதற்காக என்றே  தெரியாமலேயே சிலர் அவர்களை துரத்துகின்றன. ஒரு புலனாய்வின் திருப்பத்தில், போலீஸ் அதிகாரியான சமுத்திரக்கனியையும் அதே கும்பல் துரத்துகிறது. இவர்கள் மூவரும் சந்திக்கும்போது தங்களைத் துரத்துவதற்கான பின்னணியில் மிகப் பெரிய மனிதர்களின் சதியும், ஊழலும் இருப்பதும் தெரிய வருகிறது. அதை எப்படி அவர்கள் சமாளித்தார்கள்? குற்றவாளிகளை எப்படி தண்டித்தார்கள்? என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

நமது மாநில கல்வி முறையில் உள்ள ஊழல்களும், அரசியல்களும் எப்படி சமுதாயத்தை பாதித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான தீர்வு என்ன என்ற கருத்தை ஒரு குற்றத்தின் பின்னணியில் விறுவிறுப்பாக உருவாக்கி உள்ளோம். அச்சமின்றி சிலர் செய்யும் தவறுகளை அச்சமின்றி தட்டிக் கேட்பதே இந்த ‘அச்சமின்றி’ திரைப்படம்..” என்றார் பெருமிதத்தோடு..! 
error: Content is protected !!