பெற்றோரின் கடமைகள் பற்றிப் பேசுகிறது ‘அச்சமின்றி’ திரைப்படம்

பெற்றோரின் கடமைகள் பற்றிப் பேசுகிறது ‘அச்சமின்றி’ திரைப்படம்

‘என்னமோ நடக்குது’ என்ற வித்தியாசமான படத்தைத் தயாரித்த டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.வினோத்குமார் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘அச்சமின்றி.’

தயாரிப்பாளர் வி.வினோத்குமார், நாயகன் விஜய் வசந்த், இயக்குநர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர் ‘என்னமோ நடக்குது’ படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்த ‘அச்சமின்றி’ படத்தின் மூலம் இணைகிறார்கள்.

நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். ராதாரவி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், பரத் ரெட்டி, நித்தியா, ஜெயகுமார், ‘தலைவாசல்’ விஜய், ஷண்முகசுந்தரம் மற்றும் குழந்தை நட்சத்திரங்களாக ஹிருதிக், நிகிலாஸ்ரீ  ஆகியோரும் நடிக்கிறார்கள். கௌரவ வேடத்தில் ரோகிணி நடிக்கிறார். மிக முக்கியமான ஒரு வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

ஒளிப்பதிவு   - A.வெங்கடேஷ், இசை   -  பிரேம்ஜி, எடிட்டிங் - பிரவீன், பாடல்கள்   -  யுகபாரதி, வசனம் - ராதாகிருஷ்ணன், கலை - சரவணன், ஸ்டண்ட் –கணேஷ்குமார், நடனம் - விஜி சதீஷ், தயாரிப்பு -வி.வினோத்குமார், கதை, திரைக்கதை, இயக்கம்   -  P.ராஜபாண்டி

படம் பற்றி பேசிய இயக்குநர் பி.ராஜாண்டி, “இது கமர்ஷியல் கலந்த சமூகத்தை பிரதிபலிக்கின்ற படம். இன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெற்றோர்களுக்கு சமூகத்தின் மீது என்ன அக்கறை இருக்கிறது.? அதேபோல் இந்தச் சமூகத்திற்கு மக்கள் மீது என்ன மாதிரியான அக்கறை இருக்கிறது என்பதை பக்கா கமர்ஷியல் படமாக நிறைய செலவு செய்து உருவாக்கியிருக்கிறோம்..” என்றார்.

“இந்த படத்தின் டீசரை பார்த்துவிட்டு விஷால் ஸார் மிகவும் பாராட்டினார். அத்துடன் படத்தின் டீசரை வரும் 13-ம் தேதி அவரே வெளியிடுகிறார். விஷால் ஸாருக்கு எங்களது படக் குழுவின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..” என்றனர் நாயகன் விஜய் வசந்தும், தயாரிப்பாளர் வி.வினோத்குமாரும்.