full screen background image

லத்தீன் அமெரி்க்காவில் நடந்த உண்மைக் கதைதான் இந்தப் படத்தின் கதையாம்..!

லத்தீன் அமெரி்க்காவில் நடந்த உண்மைக் கதைதான் இந்தப் படத்தின் கதையாம்..!

முற்றிலும் வேறுபட்ட, இதுவரை எடுக்கப்படாத கதைகளை  எடுப்பது எளிதான காரியமல்ல.

இயக்குநர் B.R.விஜயலக்ஷ்மியின் இயக்கத்தில் பியா பாஜ்பாய் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அபியும் அனுவும்’ படம் இந்தப் பட்டியலில் சேரும்.

‘Yoodlee Films’ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்தப் படத்தில் சுஹாசினி, பிரபு, ரோகிணி மற்றும் மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

abhiyum anuvum movie stills

இது குறித்து இயக்குநர் B.R.விஜயலக்ஷ்மி பேசுகையில், ”சிலர் நினைப்பது போல் ‘அபியும் அனுவும்’ திரைப்படத்தின் கதை புற்று நோயை பற்றியதல்ல. இக்கதைக்கும் புற்றுநோய்க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் காதல் கதை பொதுவாக யாரும் கையாள யோசிக்கும், பார்த்து  பார்த்து  கையாள வேண்டிய கதையாகும்.

லத்தீன் அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த கதை எழுதப்பட்டுள்ளது.

வெவ்வேறு ஊர்களில்  வசிக்கும் காதலர்கள் சந்திக்கும் சவால்கள், இந்தக் காலத்து காதலில் சமூக ஊடகங்களின் பங்கு ஆகிய விஷயங்கள்  இந்தப் படத்தில் அழகாக சொல்லப்பட்டுள்ளது.

தனது வாழ்நாளில் மிக சிறந்த நடிப்பினை இந்த படத்தில் பியா பாஜ்பாய் தந்துள்ளார். படத்தின் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

தனக்கு தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் கதாநாயகன் டோவினோ தாமஸ். இவர் போன்ற ஒரு திறமைசாலியை தமிழ் சினிமாவிற்கு ‘அபியும் அனுவும்’ மூலம்  அறிமுகம் செய்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது..” என்றார்.

Our Score