நான்கு பிரம்மாண்டமான படங்களைத் தயாரிக்கும் அபிஷேக் பிலிம்ஸ்..!

நான்கு பிரம்மாண்டமான படங்களைத் தயாரிக்கும் அபிஷேக் பிலிம்ஸ்..!

தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘அரண்மனை-1’ மற்றும் ‘அரண்மனை-2’, ‘மாயா’, ‘பாகுபலி-1’, ‘சென்னை-28’, ‘இது நம்ம ஆளு’, ‘காஞ்சனா’, ‘சிவலிங்கா(தெலுங்கு)’, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ உள்ளிட்ட 20-க்கும் மேற்ப்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான விநியோகஸ்தர் ரமேஷ் P.பிள்ளை தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக 4 புதிய பிரம்மாண்டமான படங்களை தயாரிக்கவுள்ளார்.

முதல் படம் – ‘சொல்லாமலே’, ‘பூ’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் சித்தார்த் – ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகும் புதிய படம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது படம் – நட்ராஜ், இஷாரா நாயர் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் வெளிவந்து வசூல் சாதனை புரிந்த ‘சதுரங்க வேட்டை’ படத்தை தெலுங்கில் “Bluff Master” என்ற தலைப்பில் தயாரிக்கின்றார். கதாநாயகனாக சத்யதேவ், கதாநாயகியாக நந்திதா நடிக்கின்றனர்.

மூன்றாவது படம் – இளைஞர்களுக்கு பிடித்த இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படம். 

நான்காவது படம் – நடிகை டாப்ஸி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற  ‘ஆனந்தோ பிரமா’ படத்தை தமிழில் தயாரிக்கின்றார். இப்படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

“அடுத்தடுத்து எதிர்ப்பார்ப்பை கூட்டும் விதத்தில் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் ரமேஷ் P.பிள்ளை, தனது தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் பிலிம்ஸ் திரையுலகிலும், ரசிகர்களின் இதயங்களிலும் நீங்கா இடம் பிடிக்கும்…” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
error: Content is protected !!