மனநலம் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையைச் சொல்லும் ‘ஆயிஷா’ 

மனநலம் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையைச் சொல்லும் ‘ஆயிஷா’ 

Grace production நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘ஆயிஷா’.

இந்தப் படத்தில் புதுமுகம் ரவிக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக ‘உத்தரவு மகாராஜா’ படத்தில் நாயகியாக நடித்த மதுமிதா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ரமேஷ் கண்ணா, முத்துக்காளை ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு லெனின் ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவிஷ்ணு படத் தொகுப்பை மேற்கொள்ள, நடன இயக்குநராக ‘பவர்’ சிவாவும், ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். அறிமுக இயக்குநர் ரஃபீக் முஹம்மது இந்தப் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் துவக்க விழா பிரசாத் லேபில் இன்று காலையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், மக்கள் தொடர்பாளர் சங்கத் தலைவர் விஜய் முரளி, திரையுலகின் மூத்தக் கதையாசிரியர்  கலைஞானம், நடிகர் வையாபுரி, ரமேஷ் கண்ணா, நாயகன் ரவிக்குமார், நாயகி மதுமிதா, நடிகை கெளதமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இத்திரைப்படம் குறித்து இயக்குநர் ரஃபீக் முஹம்மது பேசுகையில் “மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது…” என்றார்.




error: Content is protected !!