கதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’

கதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’

ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் ஆகிய இரண்டு பட நிறுவனங்களும் இனணந்து தயாரித்துள்ள படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை.’

இந்தப் படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ரோஜா,  ஐஸ்வர்யா பழனி, மஹிரா, ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – M.P.சிவகுமார், இசை – பாலகணேஷ், படத் தொகுப்பு – G.V.சோழன், விளம்பர வடிவமைப்பு  – அயனன், இணை தயாரிப்பு – க.முருகானந்தம், தயாரிப்பு – ஜெமினி ராகவா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  K.S.முத்துமனோகரன்.

படம் பற்றி இயக்குநர் கே.எஸ்.முத்து மனோகரன் பேசும்போது, “இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். கதவு, ஜன்னல்கள் காட்டப்படாத பேய் படம் இது.

வழக்கமாக பேய் படங்களில் வரும் பங்களாக்களில் கதவு, ஜன்னல்கள் கண்டிப்பாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் வித்தியாசமாக காட்ட வேண்டும் என்பதற்காக கதவு, ஜன்னல்களை காட்டப் போவதில்லை என்று முன்பே முடிவெடுத்திருந்தோம்.

இந்தப் படத்திற்காக புதுக்கோட்டையில் ஒரு பழைய பங்களாவில் படப்பிடிப்பை நடத்தினோம். அது ராஜா காலத்து பங்களா என்பதால் அதன் கதவு, ஜன்னல்கள் அனைத்தும் தேக்கு மரங்களால் செய்யப்பட்டிருந்தன.

இருந்தும், அந்த பங்களாவில் இருந்த கதவு, ஜன்னல்கள் அனைத்தையும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து அப்புறப்படுத்தினோம். பின்னர் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவைகளை மீண்டும் அமைத்துக் கொடுத்தோம். முழுக்க முழுக்க இரவு நேரத்தில் மட்டும்தான் படப்பிடிப்பை நடத்தினோம்.

இந்த ‘ஆண்கள் ஜாக்கிரதை’ திரைப்படம் மிரட்டலான திரில்லர் படம் மட்டுமல்லாமல், இன்றைய இளைய சமுதாயத்தின் நாடித் துடிப்பை எகிற வைக்கும் படமாகவும் இருக்கும்…” என்றார் இயக்குநர் K.S.முத்து மனோகரன்.

சுஜி ஜீசஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் விநியோகஸ்தரான செந்தில்குமார் இந்தப் படத்தை பிரம்மாண்டாமான முறையில் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.




error: Content is protected !!