தந்தை, மகள் பாசத்தை வலியுறுத்தும் ‘ஆனந்த வீடு’ திரைப்படம்..!

தந்தை, மகள் பாசத்தை வலியுறுத்தும் ‘ஆனந்த வீடு’ திரைப்படம்..!

நிலா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது ‘ஆனந்த வீடு’ திரைப்படம்.

படத்தில் கதையின் நாயகனாக சிவாயம் நடித்திருக்கிறார். மேலும், அறிமுக நாயகனான துர்கா பிரசாத்தும், நாயகிாக  ககன தீபிகாவும் அறிமுகமாகியுள்ளனர். சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தம்பா பாண்டியன், வரதன் மற்றும்  பலரும் நடித்துள்ளனர். இசை – கோபாலகிருஷ்ணன்,     பாடல்கள் – ராஜமுனி, கதை, வசனம், இயக்கம் – சுகுமார்,

சிவாஜிகணேசன், நதியா நடித்து வெளிவந்த அன்புள்ள அப்பா படத்திற்கு பிறகு தந்தை மகள் பாசத்தை வலியுறுத்தும் படமாக  ‘ஆனந்த வீடு’ உருவாக்கப்பட்டுள்ளது,

திருவேங்கடம் தன் மகன் மகளுடன்.. தான் உண்டு… தன் குடும்பம் உண்டு என வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த சூழ்நிலையில் சமூக விரோதிகளால் அவரது மகன் கொலை செய்யப்படுகிறான்.  அதோடு நில்லாமல் மகளையும்  கொலை செய்யப் போவதாக மிரட்டுகின்றனர் சிலர்.

திருவேங்கடம் தனது மகளை காக்கும் முயற்சியில் ஈடுபடும்போது திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன, பாசமான மகளை சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றுகின்றாரா இல்லையா என்பதன் பின்னணியில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது,  

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இப்படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. பாடல் காட்சிகள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டது, தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி இசை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மிக விரைவில் திரைக்கு வர உள்ளது,

 




error: Content is protected !!