‘வாலிப ராஜா’ சேதுவின் அடுத்தப் படம் ‘ஆளுக்கு பாதி 50-50’

‘வாலிப ராஜா’ சேதுவின் அடுத்தப் படம் ‘ஆளுக்கு பாதி 50-50’

‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’, ‘வாலிப ராஜா’ படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் சேது.  இப்போது இவர் இந்தப் படங்களைத் தொடர்ந்து ‘ஆளுக்கு பாதி 50-50’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ‘144’ மற்றும் ‘நாரதன்’ படங்களில் நடித்த ஸ்ருதி ராமகிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் பால சரவணன், மயில்சாமி, பட்டிமன்றம் ராஜா, லொள்ளு சபா சுவாமிநாதன், மதன்பாப், ஸ்ரீரஞ்சனி, ஜான் விஜய், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘முண்டாசுப்பட்டி’ முனிஷ்கான், யோகிபாபு என பெரிய காமெடி பட்டாளங்களும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல கதாநாயகி ஒருவரிடம் பேசி வருகிறார்கள்.

ஒளிப்பதிவு – ஆர்.கே.பிரதாப், இசை – தரண், பாடல்கள் – நா.முத்துக்குமார், முத்தமிழ், படத் தொகுப்பு – ராஜா சேதுபதி, கலை – ராகவா குமார், சண்டை பயிற்சி – பில்லா ஜெகன், நடனம் – ஸ்ரீதர், சாண்டி – கதை – அலெக்ஸ், திரைக்கதை, இயக்கம் – கிருஷ்ண சாய். நகைச்சுவை நிரம்பிய இத்திரைப்படத்தை Lipi Cine Craft நிறுவனத்தின் சார்பில் வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கிறார். இது,  இவர் தயாரிக்கும் 2-வது படமாகும்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் கிருஷ்ண சாய் பேசும்போது, “இன்று இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் மக்கள் திரையரங்குகளுக்கு செல்வது அவரவர் கவலைகளை மறந்து வாய்விட்டு சிரித்து மகிழத்தான்.. அதை கவனித்தில் கொண்டுதான் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளேன்.  சென்னை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. பாடல் காட்சிகளை மட்டும் வெளிநாட்டில் படம் பிடிக்க திட்டமிட்டுள்ளோம்..” என்றார்.




error: Content is protected !!