full screen background image

ஒரு கதையில் எத்தனை படங்களடா..?

ஒரு கதையில் எத்தனை படங்களடா..?

அரவிந்த் கிருஷ்ணா இயக்கியிருக்கும் புதிய படம் ‘ஆள்’. விதார்த் ஹீரோ. படத்தின் டிரெயிலரை பார்த்தவுடனேயே மூளையில் ரத்தம் கட்டிக் கொண்டது..

ஹீரோ விதார்த் சிக்கிமில் இருந்து சொந்த ஊரான சென்னைக்கு தன்னோட கல்யாணத்துக்காக வர்றார். விமான நிலையத்திலேயே அவரை மடக்குற வில்லன் கும்பல் அவரோட செல்போனை கடத்தி வைச்சுக்கிட்டு, வேற ஒரு செல்போனை அவர்கிட்ட கொடுத்து, சில வேலைகளைச் செய்யச் சொல்லுது.. அன்றைய ஒரு நாளில் அமீர் என்னென்ன கொடுமைகளைச் செய்றார்ன்றதும், கடைசியா அவர் வில்லன்கிட்டேயிருந்து எப்படி தப்பிக்கிறாருன்றதும்தான் கதையாம்..!

இப்பத்தான் ‘புலிவால்’ வந்து.. வந்த வேகத்திலேயே திரும்பிப் போயிருச்சு. ‘புலிவாலே’ Handphone என்ற தென்கொரியப் படத்தின் காப்பி. அடுத்து இந்தப் படம் வருது. ‘புலிவால்’ல மெமரி கார்டுதான் கதைக்கரு. இதுல சிம் கார்டு. முன்னதுல மெமரி கார்டை திருப்பிக் கொடுக்கும்போது, அப்பாவியாய் சில ‘சேட்டை’களைச் செய்யச் சொல்லிட்டு அப்புறமா கொடுப்பாங்க. இதுல, முன்னாடியே பக்கவா திட்டம் போட்டு ஹீரோவை விரட்டு விரட்டுன்னு விரட்டி வேலை வாங்கிட்டு கடைசியா ‘சிம்’மை கொடுக்குறாங்களாம்.. அந்த சிம்முல அப்படியென்ன இருக்கும்..? ‘புலிவால்’ல மெமரி கார்டுல ‘இருந்தது’தான் இதுலேயும் இருக்குமோ..?

இயக்குநர்கிட்டே இது பத்தி கேக்கணும்னுதான் நினைச்சோம். ஆனா பாருங்க.. இதுக்கு 10 நிமிஷத்துக்கு முன்னாடிதான் ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ இயக்குநர் யுரேகாகிட்ட, ரொம்ப பல்பு வாங்கினதால ‘இன்னிக்குக் கச்சேரி போதும்பா… கிளம்புவோம்’னு விட்டுட்டோம்..!

Our Score