நள்ளிரவு 12 மணிக்கு பாடல்கள் வெளியீடா.. ஆ…!?

நள்ளிரவு 12 மணிக்கு பாடல்கள் வெளியீடா.. ஆ…!?

நள்ளிரவு 12 மணியும், ‘ஆ’ என்ற அலறலும் ரசிகர்களை உச்சக்கட்டத்தில் பயமுறுத்தும் கூட்டணி.

‘அம்புலி 3-D’ திரைப்படத்தை உருவாக்கிய கே.டி.வீ.ஆர். Creative Frames நிறுவனத்தினர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘ஆ’ படத்தின் பாடல் வெளியீடு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சூரியன் பண்பலை வானொலியில் ஒலிபரப்பானது.

இந்த புதுமையான விளம்பர யுத்திக்கு ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்த இரட்டை இயக்குனர்கள் ஹரி- ஹரீஷ், இப்போதெல்லாம் “திரைப்படம் எடுக்கும் சிரமத்தைவிட, விளம்பரம் செய்யும் யுக்திக்கான உழைப்பு எந்த விதத்திலும் குறைவில்லை..” என்றனர்.

‘ஆ’ திரைப்படம் எடுக்க உலகம் முழுவதும் சுற்றி சேகரித்த பயங்கர திகில் கதைகளின் அனுபவ அறிவுடன்தான் இந்த ‘ஆ’ படத்தை உருவாக்கி வருகின்றனர். ‘இந்தப் படத்தின் கதையை முடிவு செய்தவுடன், பயம் என்ற வார்த்தையுடன் சம்பந்தப்பட்ட அத்தனை நிகழ்வுகளையும் படத்தின் விளம்பரத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன்படிதான் ‘ஆ’ என்ற தலைப்பு முதல் இந்த நள்ளிரவு12 மணிக்கு பாடல் வெளியீடும் திட்டம்வரை எல்லாமே நடந்தது. எங்களது படத்தின் இந்த நள்ளிரவு ஒலி வெளியீடுதான் உலகத்திலேயே முதல் முறையானதாக இருக்கும் என நம்புகிறோம்..” என்றனர்.

படத்துக்கும் இதே மாதிரி ராத்திரி 12 மணிக்கு முதல் ஷோ போடுவீங்களா இயக்குநர்களே..?
error: Content is protected !!