தமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..!

தமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..!

தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியை பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களான சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி. பிரமிட் நடராஜன் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இதன்படி ஒரு திரைப்படத்தை தயாரிக்கும்போது அதில் நடிக்கும் நடிகர், நடிகையருக்கு முன்கூட்டியே சம்பளம் கொடுக்காமல் படம் வெளியாகி, படத்தின் அனைத்து உரிமைகளும் விற்ற பின்பு அதில் கிடைக்கும் தொகையில் இருந்து சதவிகிதத்தில் சம்பளத்தைக் கொடுக்கும் திட்டம்தான் அது.

பொதுவாக தற்போது நடைமுறையில் ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்தால் அந்தத் திரைப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கும். படத்தில் பங்கு பெற்ற நடிகர், நடிகையர், இயக்குநர்களுக்கு அடுத்தடுத்த படங்கள் கிடைக்கும். ஒருவேளை தோல்வியடைந்தாலும் நடிகர், நடிகையர், இயக்குநர்களுக்குக் கவலையில்லை. அவர்களுக்கு சம்பளம் முன்பேயே கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் தயாரிப்பாளர்தான் பாவம்.. தலையில் துண்டை போட்டு நஷ்டத்தைக் கையில் ஏந்தி அமர்ந்திருப்பார்.

இந்த நிலையை மாற்றும்விதமாகத்தான் தமிழ்த் திரையுலகத்தின் பிரபலமான விநியோகஸ்தரும், தியேட்டர் அதிபருமான திருப்பூர் சுப்ரமணியும் ஒரு புதிய முயற்சியைத் துவக்கியுள்ளார். இது பற்றி அவர் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "ஒரு புதிய முயற்சியாக புதுமையான பாணியில் திரைப்படங்களைத் தயாரிக்க இருக்கிறோம்.

இந்த படத்தில் முக்கிய வேடங்களில் சத்யராஜ், விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர், டெக்னீசியன்கள் உள்பட யாருக்கும் சம்பளம் கிடையாது.

இந்த படத்திற்கு மொத்தம் 200 தயாரிப்பாளர்கள். ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் தயாரிப்பாளராக முடியும்.

முதலீடு செய்யப்படும் இரண்டு கோடி ரூபாய் மட்டுமே படப்பிடிப்பிற்காக செலவு செய்யப்படும். படப்பிடிப்புக்கு 30 நாட்களும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு 30 நாட்களும் என 60 நாட்களில் அந்த படம் முழுமையாக முடிவடைந்து திரையரங்குகளில் வெளியாகும்.

இந்த படத்தின் ஒட்டுமொத்த வியாபாரத்தில் கிடைக்கும் தொகையை அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குனர், டெக்னீஷியன்கள் என அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ப பிரித்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் முறையாக வங்கி பரிவர்த்தனை மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும்.

முக்கியமாக இந்தப் படம் முதலில் தியேட்டரில்தான் ரிலீஸ் செய்யப்படும். 10 வாரங்கள் அல்லது 100 நாட்களுக்கு பிறகு தான் படம் ஓடிடி, டிவி உள்ளிட்ட தளங்களில் வெளியாகும். அதேபோல் தியேட்டரில் ஒவ்வொரு ஷோவுக்கும் எத்தனை டிக்கெட்டுகள் விற்பனையாகிறது என்பதை கணினி மூலம் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும். இதற்காக ஆர்.பி.சவுத்ரி ஸார் அலுவலகத்தில் தனி அலுவலகம் அமைக்கப்படும்.

இந்த புதிய முயற்சி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், படங்களின் வியாபார அடிப்படையில் சம்பளம் என்னும் புதிய திட்டம் நடைமுறைக்கு வரும். இதனால் தனிப்பட்ட தயாரிப்பாளர் மட்டும் முதலீடு செய்து லாப நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்காது…” என்று திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

திரைப்பட ஒருங்கிணைப்பு: திரு. பிரமிட் நடராஜன்

கதை: திரு. வெங்கட் சுபா

இயக்குநர் : திரு. கே.எஸ்.ரவிக்குமார்

நடிகர்கள் :  திரு. சத்யராஜ், திரு. விஜய் சேதுபதி, திரு. பார்த்திபன்

படத் தயாரிப்பின் பங்குதாரர்களாக ஆர்வத்தோடு முன் வந்திருப்பவர்கள் :

 1. சூப்பர் குட் பிலிம்ஸ் - 10 ஷேர்கள்
 2. சக்தி பிலிம்ஸ் - 10
 3. பிரமிட் நடராஜன் - 10
 4. கேபி பிலிம்ஸ் பாலு - 10
 5. எல் எம் எம் முரளி - 10
 6. காளையப்பன் - 10
 7. திருச்சி ரவி சாந்தி பிலிம்ஸ் - 10
 8. திருநெல்வேலி மணிகண்டன் - 10
 9. தயாரிப்பாளர் விஜயகுமார் - 10
 10. தயாரிப்பாளர் ஊட்டி முருகன் - 10
 11. ராக்லைன் வெங்கடேஷ் - 10
 12. டி எம் சி இளங்கோ சேலம் - 10
 13. ஏ ஒன் பட தயாரிப்பாளர் டாக்டர் - 10
 14. ராம்நாடு ரவி சந்திரன் தயாரிப்பாளர் - 10
 15. தயாரிப்பாளர் கே ராஜன் - 5
 16. திருநெல்வேலி ராம் முத்துராம் லீஸ் பார்ட்டி - 5
 17. தஞ்சாவூர் முத்தலிப் - 5
 18. அகட விகடம் பாஸ்கர் ராஜ் - 5
 19. திருமணம் படத்தயாரிப்பாளர் - 5
 20. பாண்டிச்சேரி சுந்தர் விநியோகஸ்தர் - 5
 21. தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் - 5
 22. நடிகர் உதயா குடும்பம் - 5
 23. முருகராஜ் தயாரிப்பாளர் - 5
 24. நடிகை சத்யபிரியா - 5
 25. செல்வகுமார் நண்பர் - 10

ஆக மொத்தம் - 200 ஷேர் (இருநூறு பங்குகள்)

தலா ஒரு ஷேர் மட்டும் வாங்க விருப்பத்தைத் தெரிவித்திருக்கும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் (மொத்தம் 26 பேர்):

 1. கஸாலி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்
 2. அசோக் ரங்கநாதன், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்
 3. கோவை விநியோகஸ்தர் குமரேசன்
 4. கோவை விநியோகஸ்தர் சண்முகம் சங்க மேலாளர்
 5. எம். தம்பிதுரை, இணை இயக்குனர்
 6. நெல்லிக்குப்பம் விஜயா தியேட்டர்
 7. தர்மபிரபு, தயாரிப்பாளர் ரங்கநாதன்
 8. அச்சாரம், சேகர்
 9. வெல்கோ தியேட்டர், ராஜரத்தினம்
 10. வாராகி அம்மன் பிக்சர்ஸ் திரு.வாராகி
 11. ஆர். பார்த்திபன் நியூ தமிழன் பிக்சர்ஸ்
 12. கவுன்சில் சௌந்தர்

     13. பாபு கிணத்துக்கடவு திரையரங்கு

 1. திரவிய பாண்டியன், தயாரிப்பாளர்
 2. தீக்குச்சி, தயாரிப்பாளர்
 3. வாரணாசி தியேட்டர், கதிர்வேலு
 4. மணிஸ் லெட்டர், விஜயகுமார்
 5. பரத் சீனி, கோலி சோடா தயாரிப்பாளர்
 6. தர்மராஜ், படத் தயாரிப்பாளர்
 7. சிவயோகன், ஏ பிலிம்ஸ்
 8. ஜெயபிரகாஷ், பெரியநாயகி அம்மன் கிரியேஷன்ஸ்
 9. கே. பாலு, நிமோ புரோடக்சன்ஸ்
 10. சுரேஷ், டைரக்டர்
 11. ஜி.எஸ்.முரளி, கோலிவுட் கிரியேஷன்ஸ்
 12. வெங்கடேஷ், ஓசூர்
 13. சாம்ராஜ், தயாரிப்பாளர்.