விஜய்சேதுபதி – திரிஷா  நடிக்கும் ‘96‘ திரைப்படம்

விஜய்சேதுபதி – திரிஷா  நடிக்கும் ‘96‘ திரைப்படம்

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை, விக்ரம் பிரபு நடித்த வீரசிவாஜி  போன்ற  படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில்  விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும்  ‘96 என்ற படத்தை தயாரிக்கிறார்.

கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு  – சண்முகசுந்தரம், இசை – கோவிந்த் மேனன், படத் தொகுப்பு     -கோவிந்தராஜ், கலை –  வினோத் ராஜ்குமார், பாடல்கள்  – உமாதேவி, கார்த்திக் நேத்தா. எழுத்து, இயக்கம்  –   பிரேம்குமார். இவர் ‘பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.   தயாரிப்பு   –  எஸ்.நந்தகோபால்

படம் பற்றி இயக்குநர் பிரேம்குமார் பேசும்போது, “இது முழுக்க, முழுக்க காதல் கதையாக உருவாகிறது. இந்த படத்திற்காக விஜய் சேதுபதி, திரிஷா இருவரது சிறு வயது கதாபாத்திற்கான நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு கும்பகோணத்தில் விரைவில் துவங்க உள்ளது…” என்றார்.