‘இளைய திலகம்’ பிரபு – சக்திவேல் வாசு இணைந்து நடிக்கும் ‘7 நாட்கள்’

‘இளைய திலகம்’ பிரபு – சக்திவேல் வாசு இணைந்து நடிக்கும் ‘7 நாட்கள்’

‘7 நாட்கள்’ என்கிற புதிய படத்தில் இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்திவேல் வாசு கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ‘இளைய திலகம்’ பிரபுவும் நடிக்கிறார்.

26 வருடங்களுக்கு பிறகு பிரபு – சக்திவேல் வாசு இணைந்து நடிக்கும் படம் இது. பி.வாசு இயக்கிய ‘சின்னதம்பி’ படத்தில் சிறு வயது பிரபுவாக சக்திவேல் வாசு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகியாக நிகிஷா பட்டேல் நடிக்க, மற்றுமொரு நாயகியாக அங்கனா ராய் நடிக்கிறார்.  மேலும் கணேஷ் வெங்கட்ராம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் பிள்ளை, சின்னி ஜெயந்த், விஷ்ணு, ரேஷ்மி மேனன், தேவதர்ஷினி, மாஸ்டர் ராகவன், வள்ளி விஷிஸ்டா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடங்களில் இயக்குநர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

மதன் கார்க்கி பாடல்களுக்கு இசையமைக்கிறார் விஷால் சந்திரசேகர். இவர் ‘ஜில் ஜங் ஜக்’ உட்பட பல படங்களுக்கு இசையமைத்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து, இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக விளங்கும் எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார்.

படத் தொகுப்பு – ஜெஸ்வின். கலை இயக்கம் – ராஜு. சண்டைப் பயிற்சி – பிரதீப். நடனம் – ராஜு சுந்தரம். தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.பி.பாலகோபி. ஆடை வடிவமைப்பு – கவிதா கௌதம். விமல் பீதாம்பரம் எழுதிய கதைக்கு, டி.ரமேஷ் பிரபாகரன் வசனம் எழுத, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் கௌதம் வி.ஆர். இவர் இயக்குநர் சுந்தர்.சி-யிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி அனுபவம் பெற்றவர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மாதவரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் இன்று பூஜையுடன் துவங்கியது.

கே.கார்த்திக், கே.கார்த்திகேயன் இருவரும் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் ‘7 நாட்கள்’ படப்பிடிப்பை வரும் ஜூலை இறுதிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
error: Content is protected !!