‘7  நாட்கள்’ திரைப்படத்தின் இசையை நடிகர் தனுஷ் வெளியிட்டார்

‘7  நாட்கள்’ திரைப்படத்தின் இசையை நடிகர் தனுஷ் வெளியிட்டார்

மில்லியன் டாலர் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம்  சார்பில், கார்த்திக் மற்றும் கார்த்திகேயன் தயாரிக்க, அறிமுக இயக்குநர் வி.ஆர்.கௌதம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘7 நாட்கள்’.

இயக்குநர் P.வாசுவின் மகன் சக்தி வாசு  கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல் மற்றும் அங்கனா ராய் நடிக்கின்றனர். கணேஷ் வெங்கட்ராமன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் பிரபு கணேஷன், நாசர், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ராஜீவ் கோவிந்த பிள்ளை  ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு பாடலான,  ‘புடிச்சிருக்கா பெண்ணே சொல்லிபுடு’ என்ற பாடல் மதன் கார்க்கி எழுதி டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில். இப்படத்தின் இசையை நடிகர் தனுஷ்  நேற்று வெளியிட்டார்.

இப்படத்தை வருகின்ற மே மாதம் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
error: Content is protected !!