30 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் டீஸர்..!

30 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் டீஸர்..!

‘தேவர் மகன்’ படத்தில் கமலஹாசன் -ரேவதி  ஜோடி மிக அருமையாக நடிப்பை வெளிப்படுத்தி, இசை ஞானி இளையராஜாவின் இன்னிசையில் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான பாடல் ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல்.

அந்தப் பாடலின்  முதல் வரியில் துவங்கும் தலைப்புடன் ஆர்யா. அனுஷ்கா ஜோடியாக நடிக்க பி.வி.பி. நிறுவனம் பிரகாஷ் கோவிலமுடி இயக்கத்தில் உருவாக்கியிருக்கும் படம் 'இஞ்சி இடுப்பழகி.'

இந்தப் படத்தின் டீசரை இசை வெளியீடு குறித்த  டீசரை இதுவரையிலும் 30 லட்சத்துக்கும் மேலானோர் ரசித்து பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் ஆர்யா-அனுஷ்கா ஜோடி  கமலஹாசன்-கௌதமி ஜோடி போலவே பிரதிபலிக்கும்  'இஞ்சி இடுப்பழகி’ என்று தொடங்கும் பாடல் டீசராக வெளி வருகிறது. இந்த டீசர்  ஒரிஜினல் பாடலின் தன்மையும், இனிமையும் கெடாதவாறு படமாக்கப்பட்டு உள்ளது.

poster_03

நகைச்சுவை  கலந்த காதல் படமாக உருவாகும் இந்த 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் ஆர்யா, அனுஷ்கா ஆகியோருடன் சோனல் சௌஹன், பிரகாஷ் ராஜ், பரத், ஊர்வசி ஆகியோருடன் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

poster_06 

கனிகா  தில்லான் கொவிலமுடியின்  கதை வடிவத்தில், மரகதமணியின் இசையில், நீரவ்  ஷாவின் ஒளிப்பதிவில், ஆர்.எஸ். பிரசன்னாவின் வசனத்தில், மதன் கார்க்கியின் பாடல் வரிகளில் உருவாகி  எல்லோர் மனதையும் கவரும் வண்ணம் உருவாகும் 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் பாடல்கள் இந்த மாதம் வெளி வரும் என அறிவித்து உள்ளனர் படக் குழுவினர்.