full screen background image

2016-ல் அதிகப் படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியல்

2016-ல் அதிகப் படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியல்

சென்ற 2016-ம் ஆண்டில் பெரிய ஹீரோக்களைவிடவும் இளைய ஹீரோக்கள்தான் அதிகமான படங்களில் நடித்து தங்களது வேகத்தைக் கூட்டியிருக்கிறார்கள்.

விஜய் சேதுபதிதான் அதிகமாக 6 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு அடுத்து பாபி சிம்ஹா 5 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சசிகுமார் 4 திரைப்படங்களிலும், விஷால், ஜி.வி.பிரகாஷ்குமார் இருவரும் தலா 3 திரைப்படங்களிலும், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் தலா 2 திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்கள்.

மாஸ் ஹீரோக்களான ரஜினி, விஜய், விக்ரம். சூர்யா, கார்த்தி ஆகியோர் தலா 1 திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்கள்.

இதோ சென்ற ஆண்டு அதிகப் படங்களில் நடித்திருக்கும் நடிகர்களும், அவர்களின் படங்களின் பட்டியலும்..!

நடிகர் விஜய் சேதுபதி – (6 திரைப்படங்கள்) – ‘காதலும் கடந்து போகும்’, ‘றெக்க’, ‘இறைவி’, ‘சேதுபதி’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘தர்மதுரை’

பாபி சிம்ஹா – (5 திரைப்படங்கள்) – ‘பெங்களூர் நாட்கள்’, ‘இறைவி’, ‘கோ-2’, ‘மீரா ஜாக்கிரதை’, ‘கவலை வேண்டாம்’

சசிகுமார் – (4 திரைப்படங்கள்) – ‘தாரை தப்பட்டை’, ‘வெற்றிவேல்’, ‘கிடாரி’, ‘பலே வெள்ளையத்தேவா’

விஷால் – (3 திரைப்படங்கள்) – ‘கதகளி’, ‘மருது’, ‘கத்திச்சண்டை’

ஜி.வி.பிரகாஷ்குமார் – (3 திரைப்படங்கள்) – ‘பென்சில்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’

தனுஷ் – (2 திரைப்படங்கள்) – ‘தொடரி’, ‘கொடி’

சிம்பு – (2 திரைப்படங்கள்) – ‘இது நம்ம ஆளு’, ‘அச்சம் என்பது மடமையடா’

சிவகார்த்திகேயன் – (2 திரைப்படங்கள்) – ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’

ரஜினி – ‘கபாலி’

விஜய் – ‘தெறி’

விக்ரம் – ‘இருமுகன்’

சூர்யா – ‘24’

கார்த்தி – ‘காஷ்மோரா’

கமல்ஹாசன், அஜித் நடித்த படங்கள் இந்தாண்டு எதுவும் வெளிவரவில்லை.

Our Score