full screen background image

தீபாவளி தினத்தில் 2 படங்கள் ரிலீஸ்.. 3 படங்களின் டிரெயிலரும் ரிலீஸாம்..!

தீபாவளி தினத்தில் 2 படங்கள் ரிலீஸ்.. 3 படங்களின் டிரெயிலரும் ரிலீஸாம்..!

வரும் தீபாவளியன்று இப்போதுவரையிலும் இரண்டு திரைப்படங்கள் மட்டுமே கன்பார்ம். அது ‘பூஜை’யும், ‘கத்தி’யும்..!

‘கத்தி’யின் களேபரமே இந்தாண்டு தீபாவளியை நாலாபுறமும் சத்தமாகக் கொண்டாடும் என்பதில் சந்தேகமில்லை.

இன்னொரு பக்கம் டிவிக்களில் புத்தம் புதிய திரைப்படங்களாக இந்தாண்டு வெளிவந்த சிறந்த படங்களே வரிசை கட்டி நிற்கின்றன..

இந்த இடைவெளியில் இதே நாளின் அதீத முக்கியத்துவத்தை பகிர்ந்து கொள்ள மூன்று பேர் இதுவரையில் முன் வந்திருப்பதாகத் தகவல்.

கடந்த பொங்கலன்று ‘ஜில்லா’வோடு மோதிய அஜீத்.. தனது அடுத்த படத்தை பொங்கல் கழித்துதான் கொண்டு வரவிருக்கிறார். படத்திற்கு இன்னமும் டைட்டில்கூட வைக்கவில்லை. அந்த டைட்டில் செய்தியை தீபாவளி அன்று ரிலீஸ் செய்யலாமா என்று யோசனையில் இருக்கிறாராம். கூடவே அந்தப் படத்தின் முதல் டீஸரும் அன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் டீஸர் தீபாவளியன்று வெளியாகும் என்று திட்டவட்டமாக சொல்லியிருக்கிறார்கள்.

இது போதாதென்று இயக்குநர் எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் ‘வெள்ளைக்கார துரை’ படத்தின் டிரெயிலரும் தீபாவளியன்று வெளியாக இருக்கிறதாம்..!

ஆக மொத்தம்.. இந்தத் தீபாவளியில் எதை பார்ப்பது, எதை ஃபாலோ செய்வது என்கிற பிரச்சினையிலேயே ரசிகர்களுக்கு வெடி வெடிக்கக்கூட மறந்து போகும் நிலை உருவாகலாம்..!

Our Score