சீனாவில் உலக சாதனை படைக்கவிருக்கும் ‘2.0’ திரைப்படம்..!

சீனாவில் உலக சாதனை படைக்கவிருக்கும் ‘2.0’ திரைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மெகா இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் லைகா புரொடெக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி தற்போது உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘2.0.’

இத்திரைப்படம் அடுத்த வருடம் மே மாதம் சீனாவில் திரையிடப்படவுள்ளது. இதுவரையிலும் எந்த மொழி சினிமாவும் திரையிடாத வகையில் மிக அதிகமான தியேட்டர்களில், சுமார் 10000 தியேட்டர்கள் மற்றும் 47000 3-டி திரைகளை உள்ளடக்கிய 56,000 திரைகளில் இந்த ‘2.0’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதற்காக சீனாவின் மிகப் பெரிய பட வெளியீட்டு நிறுவனமான HY Media என்கிற நிறுவனத்துடன் லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த HY Media நிறுவனம்தான் மிக நீண்ட காலமாக சீனாவில் ஹாலிவுட் பட நிறுவனங்களான Sony, 20th Century Fox, Disney, Warner Bors, Universal ஆகியவை தயாரிக்கும் ஹாலிவுட் படங்களை டப்பிங் செய்து வெளியிட்டு வருகிறது. இதே நிறுவனம் ‘2.0’-வை வெளியிடுவதால் நிச்சயமாக படத்திற்கு சீனாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை அது ஏற்படுத்தும்.

சீனாவில் ஒரு வெளிநாட்டு திரைப்படம் திரையிட வேண்டுமெனில் அதற்கான சென்சார் அனுமதி மற்றும் திரையிடல் அனுமதி போன்றவைகள் கிடைக்க குறைந்தபட்சம் 3 மாதங்களாகவது ஆகும் என்பதால் ‘2.0’ திரைப்படம் அடுத்த வருடம் மே மாதம் வெளியிடப்படும் என்று லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
error: Content is protected !!