10-வது ஆண்டாக நடைபெற்ற ‘1980 நட்சத்திரங்களின் சந்திப்பு’

10-வது ஆண்டாக நடைபெற்ற ‘1980 நட்சத்திரங்களின் சந்திப்பு’

1980-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழி திரையுலகத்திலும் கொடி கட்டிப் பறந்த நடிகர், நடிகைகள் வருடத்திற்கு ஒரு முறை சந்தித்து விழா கொண்டாடி வருகிறார்கள்.

இந்தாண்டு 10-வது ஆண்டாக இந்த விழாவைக் கொண்டாடினார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்தில் இந்த விழா நடைபெறும். இந்தாண்டு ஹைதராபாத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் புதிய இல்லத்தில் நேற்றைக்கு இந்த விழா நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன்லால், வெங்கடேஷ், ஜெகபதி பாபு, கே.பாக்யராஜ், பானுசந்தர், சுமன், சரத்குமார், பிரபு, ஜெயராம், ரகுமான், ராஜ்குமார் சேதுபதி, சுரேஷ், நாகார்ஜூனா, நரேஷ், ரமேஷ் அரவிந்த், ஜாக்கி ஷெராப்..

மற்றும்

நடிகைகள் லிஸி, குஷ்பூ, சுஹாசினி, சுமலதா, ராதிகா, சரிதா, ராதா, அம்பிகா, நதியா, பூர்ணிமா பாக்யராஜ், மேனகா, பார்வதி ஜெயராம், ஜெயஸ்ரீ, ஜெயசுதா, ஸ்வப்னா, பூனம் தில்லான், ரேவதி, ஜெயப்பிரதா, ஷோபனா, அமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.




error: Content is protected !!