1980-களின் திரையுலக நட்சத்திரங்கள் சந்திப்பு..!

1980-களின் திரையுலக நட்சத்திரங்கள் சந்திப்பு..!

கடந்த சில ஆண்டுகளாக 1980-ல் பிரபலமாக இருந்த நடிகர்-நடிகைகள், சென்னையில் ஒரு நாளில் சந்தித்து பேசி நட்பை வளர்த்து வந்தார்கள். இந்த நிகழ்ச்சிகளிலெல்லாம் வருடந்தோறும் ரஜினி கலந்து கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் வந்ததே இல்லை.

வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் இந்த நிகழ்ச்சியை அவர்களில் யாரேனும் ஒரு பிரபலம் பொறுப்பேற்று நடத்துவார்கள். சென்ற வருடம் சுஹாசினி தன் பொறுப்பில் ஈசிஆர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடத்தினார்.

இந்த வருடம் அந்தப் பணி நடிகை ராதிகாவுடையது. கடந்த மாதம் 24-ம் தேதி இந்த விழா நடைபெறுவதாக இருந்த நிலையில் அதற்கு முதல் நாள் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் காலமானதால் அந்த நிகழ்ச்சி ஒத்திப் போடப்பட்டு நேற்று முன்தினம் மாலை அடையாறில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இந்தாண்டு கொஞ்சம் வித்தியாசமாக 1980-களில் கொடி கட்டிப் பறந்த நட்சத்திரங்களுக்கு இன்றைய இளம் கதாநாயகர்-கதாநாயகர்கள் பாராட்டி பேசி, விருது கொடுப்பது என்று நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தார்கள். அது போலவேதான் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், பிரபு, ராதாரவி, வாகை சந்திரசேகர், விஜயகுமார், மோகன், சரத்பாபு, சுரேஷ், சரண்ராஜ், ராம்கி, அருண்பாண்டியன், ராஜா, பிரதாப் போத்தன், நாசர், எஸ்.வி.சேகர், சின்னி ஜெயந்த், தியாகு, டெல்லிகணேஷ், ராஜ்குமார், ரவிகுமார், நடிகைகள் ஸ்ரீப்ரியா, லதா, சுஹாசினி, ரேவதி, குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், நதியா, மீனா, ரோஜா, ரேகா, அர்ச்சனா, ரம்யாகிருஷ்ணன், சீதா, மதுபாலா, ஊர்வசி, ரதி அக்னிஹோத்ரி, ரூபினி, லிசி, மேனகா, நிரோஷா, நளினி, அருணா, குயிலி, வடிவுக்கரசி, ஜோதிலட்சுமி, டான்ஸ் மாஸ்டர்கள் புலியூர் சரோஜா, கலா, பின்னணி பாடகி பவதாரணி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இவர்களோடு இன்றைய இளம் நட்சத்திரங்களான சிலம்பரசன், தனுஷ், விஜய் சேதுபதி, பிரசன்னா, கணேஷ் வெங்கட்ராம், வைபவ், இமான் அண்ணாச்சி, சங்கீதா, நமீதா, பிந்து மாதவி, நீதுசந்திரா, வேதிகா, ஐஸ்வர்யா, அபிராமி, பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இதில் கலந்து கொண்டார்கள்.

இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.சுந்தர்ராஜன், பி.வாசு, ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், ஹரி, சுந்தர்.சி, வெற்றிமாறன், டி.பி.கஜேந்திரன், அரவிந்தராஜ், வசந்த், கஸ்தூரிராஜா, சந்தானபாரதி, மனோபாலா, சமுத்திரகனி, ஏ.வெங்கடேஷ், தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், பஞ்சு அருணாசலம், திருப்பூர் மணி, கேயார், ஜி.தியாகராஜன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன், சித்ரா லட்சுமணன், அன்புசெழியன், புஷ்பா கந்தசாமி, விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், கவிஞர் சினேகன் ஆகியோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் நடிகை ஷோபனா குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு நடிகர்-நடிகைகள் அனைவரும் இன்றைய இளம் கதாநாயகர்களுடன் சேர்ந்து ஆடினார்கள். சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.

சென்ற 4 ஆண்டுகளாக இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினி இந்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.