13-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தள்ளி வைப்பு..!

13-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தள்ளி வைப்பு..!

சென்னையில் வரும் 10-ம் தேதி முதல் 17-ம் தேதிவரையிலும் நடைபெறவிருந்த 13-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒத்தி வைக்கப்படுவதாக அந்த விழாவினை நடத்தும் ICAF எனப்படும் International Cine Appreciation Forum தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இது :

மதிப்பிற்குறிய பத்திரிகையாளர் நண்பர்களுக்கு,

வணக்கம்.

இந்நாள் வரை சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தாங்கள் அனைவரும் அளித்து வந்த அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் நன்றி

சற்றும் எதிர்பாரா நேரத்தில் ஏற்பட்ட மழையினாலும் வெள்ளத்தினாலும், பொதுமக்கள் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை படிப்படியாக திரும்பி கொண்டிருக்கும் இந்நிலையில் இம்மாதம் 10ஆம் தேதி நடக்கவிருந்த 13ஆம் சென்னை சர்வதேச திரைப்பட விழா தற்போதைக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

13-ம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் புதிய அட்டவணை நாள், நேரம் மற்றும் இடத்தின் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

உங்கள் ஆதரவிற்க்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி.
error: Content is protected !!