ஜி.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே நடிப்பில் ‘100% காதல்’ திரைப்படம் இன்று துவங்கியது..!

ஜி.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே நடிப்பில் ‘100% காதல்’ திரைப்படம் இன்று துவங்கியது..!
Creative Cinemas NY & NJ Entertainment Production ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘100% காதல்’.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ஹீரோயினான ஷாலினி பாண்டே நடிக்கிறார். மேலும் ஜெயசித்ரா, ரேகா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கவுள்ளனர்.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான எம்.எம்.சந்திரமெளலி இயக்குகிறார். 
இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று காலை ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. இயக்குநர் இமயம் பாரதிராஜா குத்துவிளக்கேற்றி படத்தினை துவக்கி வைத்தார்.